விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து*  இரங்கி நெஞ்சே!* 
    மெய்ஞ்ஞானம் இன்றி*  வினை இயல் பிறப்பு அழுந்தி,*
    எஞ்ஞான்றும் எங்கும்*  ஒழிவு அற நிறைந்து நின்ற,* 
    மெய்ஞ் ஞானச் சோதிக்*  கண்ணனை மேவுதுமே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சே! - மனமே
இருந்து இருந்து - நிரந்தரமாக
இரங்கி - வருந்தி
மெய் ஞானம் இன்றி - யதார்த்த ஞானமில்லாமையாலே
வினை இயல் பிறப்பு - பாபங்களின் பலனாக சேர்ந்த ஜன்மங்களிலே

 

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “நின்நற்பொற் சோதித்தாள்” என்று திருவடியின் பரம போக்யதையின் ப்ரஸ்தாவம் வரவே அந்தத் திருவடி விஷயத்தில் நெஞ்சுக்கு ஒரு பதற்றம் உண்டாயிற்று; அது கண்ட ஆழ்வார் நெஞ்சை நோக்கி, ‘கெடுவாய்! உனது நிலைமையை ஆராயாது நல்லதையாசைப்பட்டால் அது உனக்குக் கிடைக்குமோ?” என்கிறார். “எஞ்ஞான்று நாம்” என்றவிடத்து, ‘எஞ்ஞான்று’ என்றும் பிரிக்கலாம். ‘எஞ்ஞான்றும்’ என்றும் பிரிக்கலாம். பூருவாசாரியர்களுக்கு இரண்டுவகையும் உடன்பாடே ‘எஞ்ஞான்று’ என்று பிரித்தால் ‘மேவும்’ என்ற வினைமுற்றோடே அந்வயிக்கும். எஞ்ஞான்று மேவுதும்- என்றைக்கு அடைவோம்? என்றைக்கும் அடைய வழியில்லையென்பது குறிப்பு. ‘எஞ்ஞான்றும்’ என்று கொண்டால் பக்கத்திலேயே அதற்கு அந்வயமாகும். எப்போது மிரங்கி என்றவாறு. இப்பக்ஷரத்தில் ‘மேவுததுமே என்றவிடத்து ஏகாரம் எதிர்மறையாய் மேவமாட்டோமென்றவாறாம்.

English Translation

O Heart of mine, benefit of true knowledge, you suffer endless karmic birth. O when will we join our knowledge-Lord, the radiant Krishna who lives in all forever?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்