விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அண்டத்து அமரர் பெருமான்*  ஆழியான் இன்று என்மகளைப்* 
    பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்*  பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?* 
    கொண்டு குடி- வாழ்க்கை வாழ்ந்து*  கோவலப் பட்டம் கவித்துப்* 
    பண்டை மணாட்டிமார் முன்னே*  பாதுகாவல் வைக்குங் கொல்லோ?* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அண்டத்து அமரர் - பரமபதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு;
பெருமான் - தலைவனும்;
ஆழியான் - திருவாழியாழ்வானையுடையனுமான கண்ணபிரான்;
என் மகளை - என் பெண்பிள்ளையை;
பண்டம் பழிப்புக்கள் சொல்லி - பதார்த்தங்களுக்குக் குறை சொல்வது போல் (இவளது) ரூபகுணங்களிற் சில குறைகளைச் சொல்லி;

விளக்க உரை

உலகத்தில் குற்றமேகண்ணாயிருப்பவர் எப்படிப்பட்ட பதார்த்தங்களிலும் ஏதாவதொருகுறையைக் கூறுவது வழக்கம்; அதுபோல் கண்ணபிரானும் என்மகளிடத்து ரூபகுணங்களில் ஏதாகிலுமொறு குறையைக் கூறித்தாழ்வ நினைத்து “இவளை வாசல் பெருக்குகிற தொழிலில்விடுங்கள்” என்று புறத்தொழில்களில் நியமித்துவிடுவனோ? அன்றி, முன்னமே பட்டங்கட்டிக் கொண்டு அந்தப்புர மஹிக்ஷிகளாயிருப்பவர்களோடு சேர்த்து இவள் கருத்தின் படி ஸகலகாரியங்களையும் நிர்வஹிப்பவனோ? என்று ஸந்தேஹிக்கிறாள். “பண்டப் பழிப்புகள் சொல்லி” என்பதில், உபமேயார்த்தம் தொக்கி நிற்கின்றது; “மருத்துவப்பதம் நீங்கினாள்” என்பதிற்போல.

English Translation

The Lord of gods and the Universe bears the discus. Today will he find fault with my daughter’s qualities and insult her or will her let her into his earlier wives’ midst, to live with him in proper style and security? O, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்