விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கிற்பன் கில்லேன்*  என்று இலன் முனம் நாளால்,* 
    அற்ப சாரங்கள்*  அவை சுவைத்து அகன்றொழிந்தேன்,*
    பற்பல் ஆயிரம்*  உயிர் செய்த பரமா,*  நின் 
    நற் பொன் சோதித்தாள்*  நணுகுவது எஞ்ஞான்றே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அற்பம் சாரங்கள் அவை - க்ஷுத்ர விஷயங்களையே
அற்பம் சாரங்கள் அவை - க்ஷுத்ர விஷயங்களையே
சுவைத்து - அநுபவித்து
அகன்று ஒழித்தேன் - உன்னைவிட்டு நீங்கிக் கிடந்தேன்.
பல்பல் ஆயிரம் உயிர் - எண்ணிறந்த ஜீவராசிகளை

 

விளக்க உரை

பிரானே! இதற்கு முன்புள்ள காலமெல்லாம் உன் திருவடிகளைச் சேருமைக்கு உறுப்பாயிருப்பதொரு ஸுக்ருதத்தைச் செய்ததுமில்லை, துஷ்க்குதல்கள் தவிர்ந்ததுமில்லை; எதையும் தோன்றினபடிச் செய்து திரிந்தேன்; இப்படிச் செய்து திரிந்து மிகவும் அற்பமான விஷயரஸங்களைப் புஜித்து உன் திருவடிகளுக்குப் புறம்பாகியே அகன்றொழிந்தேன். அனந்தகோடி ஜீவராசிகளுக்குக் கரண்களே பரப்ரதானம் பண்ணி கடத்திப் போருகின்றவுனக்கு என்னை யொருவனையும் உன் திருவடிகளுக்கு உரியேனாம்படி பண்ணியருளுகை அரிதான காரியமோ? அங்ஙனே திருவுள்ளம் பற்றியருளலாகாதோ? இந்த மஹாபாக்யம் என்றைக்கு நேருமோ என்கிறார். கிற்பன்கில்லேன் என்றிலன் = கிற்பன் என்றிலன், கில்லேன் என்றிலன் என்று அந்வயிப்பது. பெரியோர்கள் சில காரியங்களைச் செய்யவேண்டுபடியாக விதிப்பர்கள்; சில காரியங்களைச் செய்ய வேண்டாவென்று மறுப்பர்கள். செய் என்று விதிக்கும் காரியங்களைச் செய்ய வேண்டடாவென்று மறுப்பர்கள். செய் என்று விதிக்கும் காரியங்களை ‘அப்படிச் செய்கிறேன்’ என்று சொல்லுவதும்,செய்ய வேண்டாவென்று மறுக்கும் காரியங்களை ‘செய்வதில்லை’ என்பதும் சாஸ்த்ரவச்யர்களுக்குக் கடமையாகும். இந்தக் கடமையை நான் தவறிவிட்டேனென்கிறார் இங்கு முதலடியில். தவ்ம் மே என்று எம்பெருமான் சொன்னால் ஆமாம் என்று நான் இசைந்திருந்ததுமில்லை, ‘அஹம் மே’ என்று சொல்லாமலிருந்ததுமில்லை என்றபடி. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின் :- “ஆழ்வீர்! பகவத் விஷயத்தில் வந்தால் இச்சைக்கு மேற்பட ஓர் ஆயாஸமின்றிக்கே, பேற்றில் வந்தால் அபுநராவ்ருத்திலக்ஷண மோக்ஷமாயிருக்கும்; அதுக்கீடாக ஒன்றைச் செய்யவல்லீரே? என்றால், ஓம், அப்படிச் செய்கிறேன் என்றிலன். “இதர விஷயப்ராவண்யமாகிறது- ஆயாஸம் கனத்துப் பேற்றில் ஒன்று இன்றிக்கேயிருக்கும். அத்தைத் தவிர வல்லீரே?” என்றால், ஒம், தவிருகிறேன் என்றினை.”- என்று.

English Translation

Then I had no power to discriminate, and lost myself in trivial pleasures. O Lord you made these countless thousand souls! O when will I reach your golden feet?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்