விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வந்தாய் போலே*  வந்தும் என் மனத்தினை நீ,* 
    சிந்தாமல் செய்யாய்*  இதுவே இது ஆகில்,* 
    கொந்து ஆர் காயாவின்*  கொழு மலர்த் திருநிறத்த 
    எந்தாய்,*  யான் உன்னை*  எங்கு வந்து அணுகிற்பனே?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வந்தாய் போலே வந்தும் (ப்ரஹ்லாதன் கஜேந்திரன் முதலானார்க்கு) வந்து தோன்றினாய் போலே வந்தாகிலும்
என் மனத்தினை எனது நெஞ்சை
சிந்தாமல் சிதிலமாகாதபடி
நீ செய்தாய் நீ செய்வதில்லை
இதுவே உதவி செய்யாமையாகிற இதுவே
 

விளக்க உரை

(வந்தாய்போலே) கீழ்ப்பாட்டில் “நின்தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான். “ஆழ்வீர்! வந்தருளவேணும் வந்தருளவேணுமென்னா நின்றீர்; ஒரு கால் வந்து (இராமனாய்) பதினோராயிரமாண்டு இருந்தோம்; மற்றொருகால் வந்து (க்ருஷ்ணனாய்) நூற்றாண்டிருந்தோம். இன்னமும் வருவதென்றால் அது ப்ரயாஸமாயிருக்கிறது காணும் என்ன; அதுகேட்ட ஆழ்வார், ‘பிரானே! அவ்வவதாரங்கள் போலே எனக்காகவும் வந்து சில நாளிருந்து ஸேவை ஸாதிக்கத் திருவுள்ளமானால் அழகியது; அது செய்யத் திருவுள்ளமில்லையாகில் ஆனைக்குத் தொற்றினாப்போலேயும் ப்ரஹ்லாதனுக்குத் தோற்றினாப்போலேயும் எனக்குமொருகால் தோற்றியருளியாகிலும் உதவ வேணுமென்கிறார். வந்தாய்போலே வந்தும் என்றது ப்ரஹ்லாத கஜேந்த்ராதிகளுக்கு வந்தாப்போலேயாகிலும் வந்து என்றபடி. ஆனைக்கு அருள் செய்ததுபோலே எனக்கும் அருள் செய்து என் ஆர்த்தியைப் பரிஹரிக்கின்றிலை; இப்படி உதவாமையாகிறவிதுவே நித்தியமாய்ச் சொல்லுமாகில், நான் என்னுடைய முயற்சியினால் உன்னை வந்து சேருகையென்று ஒரு பொருளுண்டோ? இனி உன்னுடைய வடிவழகைக் காணப்பெறாதே இழந்து போமித்தனையன்றோ! என்றாறாயிற்று

English Translation

My Lord of Kaya-blossom hue! You seem to come, my radiant Lord, but never stay! O, How now can I join you, if you do not stay and give me strength?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்