விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சூழ்ச்சி ஞானச்*  சுடர் ஒளி ஆகி,*  என்றும் 
  ஏழ்ச்சி கேடு இன்றி*  எங்கணும் நிறைந்த எந்தாய்,*
  தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து*  நின் தாள் இணைக்கீழ் 
  வாழ்ச்சி,*  யான் சேரும்*  வகை அருளாய் வந்தே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சூழ்ச்சி - (எல்லாவற்றையும்) சூழ்ந்து கொள்ளுகிற
சுடர் ஒளி - மிகவும் விலக்ஷணமான
ஞானம் ஆகி - ஞானத்தையுடையாய்
என்றும் - எக்காலத்திலும்
ஏழ்ச்சி கேடு இன்றி - விகாஸமும் ஸங்கோசமுமில்லாமல்

விளக்க உரை

பெருமானே! அவதாரங்களுக்குத் தப்பினேன் என்பது மாத்திரமேயோ? எல்லாரையும் ரக்ஷிக்கைக்காக நீ ஸர்வ வ்யாபியாயிருக்கிற இருப்பும் எனக்குக் கார்யயமாகவில்லையே, நான் உன்னைப் பெறும்வழி நீயே பார்த்தருள வேணுமென்கிறார். ஸமஸ்த சேதநரையும் உன் பக்கலிலே சூழ்ந்துக் கொள்ளவற்றான அத்யந்த விலக்ஷ்ண ஜ்ஞானத்தையுடையையாய், ஸங்கோச விகாஸங்களொன்று மின்றியே என்றைக்கும் எவ்விடத்தும் வியாபித்து என்னை அடிமை கொள்வதற்காக விருக்கிறவனே! உன் திருவடிகளொழியப் புறம்புண்டான விஷயங்களில் நசையெல்லாமற்று உன்றன் பொன்னடிகளில் பரம போக்யமான கைங்கரியத்தை நான்பெறும்படி இன்னுமோர் திருவவதாரம் பண்ணியாகிலும் செய்தருளவேணும் என்கிறார். சூழ்ச்சி ஞானச் சுடரொலியாகி என்றது ஸாபிப்ராயம்; எல்லாரையும் சூழ்த்துக் கொள்ளவற்றான உன்னுடைய திய்வ ஜ்ஞானமும் என்னைச் சூழ்ந்துக்கொள்ளமாட்டதொழிந்ததே! என்றபடி. என்றும் ஏழ்ச்சிக் கேடின்றி யெங்கணும் நிறைந்த வெந்தாய்! என்றதும் ஸாபிப்ராயம்; எல்லா விடத்திலுமுண்டான எல்லாவற்றிலும் பூர்ணமாக வியாபித்திருந்தும் என்னை அகப்படுத்திக் கொள்ளமாட்டாதொழிந்தாயே! என்றபடி.

English Translation

O Lord of infinite illumination, pervading all with no loss or gain! Pray come and tell me how I may cut my lowly ways and find your lotus feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்