விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முந்நீர் ஞாலம் படைத்த*  எம் முகில் வண்ணனே,* 
  அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,*
  வெம் நாள் நோய் வீய*  வினைகளை வேர் அறப் பாய்ந்து,* 
  எந் நாள் யான் உன்னை*  இனி வந்து கூடுவனே? (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முந்நீர் ஞாலம் படைத்த - கடல் சூழ்ந்த இவ்வுலகை ஸ்ருஷ்டித்தவனும்
எம் முகில் வண்ணனே - மேகத்தின் நன்மைபோன்ற தன்மையை யுடையவனுமான எம்பெருமானே!
அ நாள் - அந்த ஸ்ருஷ்டி ஸமயத்தில்
நீ தந்த - நீ கொடுத்தருளின
ஆக்கையின் - சரீரத்தினுடைய

விளக்க உரை

உன்னை யடிபணிந்து உய்வதற்காக நீ தந்தருளின சரீரத்தைக்கொண்டு உன்னைப் பணியாமல் அவ்வுடலின் வழியே யொழிகி அநர்த்தப்பட்டேன்; நான் உன்னை என்று ஸேவிக்கப் பெறுவது என்று ஆர்ந்தராய்க் கூப்பிடுகிறார். எம்முகில் வண்ணனே: = எம்பெருமான் உலகங்களைப் படைத்ததெல்லாம் ஆழ்வார் தமக்காகவே யென்று கொண்டிருக்கின்றமை எம் என்பதனால் தொனிக்கும். முகிலுக்கும் எம்பெருமானுக்கும் ஸாம்யம் நிறத்தினால் மாத்திரமன்று; தன்மைகள் பலவற்றாலுங் காண்க. பின்னடிகளின் கருத்து:- உன்னைப் பிரிந்து தரிக்க கில்லாமல் செல்லுகிற நாளில், பிரிந்து நோவுபடுகைக்கீடான பாவங்களை வேரறுத்து உன்னடி சேர்ந்து உய்வது

English Translation

O cloud-hued Lord, you made the Earth and Ocean! This body you have me then drags on painfully, O, when will I cut my Karmas by the root, when end this wretched life and join you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்