விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வியப்பாய வியப்புஇல்லா*  மெய்ஞ் ஞான வேதியனைச்,* 
  சயப்புகழார் பலர் வாழும்*  தடம் குருகூர்ச் சடகோபன்,*
  துயக்கு இன்றித் தொழுது உரைத்த*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
  உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்*  ஒலி முந்நீர் ஞாலத்தே. (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வியப்பு ஆய - (அந்யத்ர) ஆச்சர்யகரமானவை
வியப்பு இல்லா - (தன்னிடத்து) ஆச்சர்யகரமாகக் பெறாதவனும்
மெய் ஞானம் வேதியனை - (மெய்யுணர்வுக்கிடமான வேதங்களால் பேசப்படுபவனுமான பெருமானை,
சயம் புகழார் பலர் வாழும் - ஜயசீலமான புகழையுடைய பல நல்லார் நவிலுமிடமான
தடம் குருகூர் - பெரிய திருநகரிக்குத் தலைவரான

விளக்க உரை

உரை:1

மற்றவர்களுக்கு வியப்பாக இருப்பவை எல்லாம் தன்னிடம் வியப்பில்லாமல் போகும் படியான பெருமையையுடைய, மெய்ஞானத்தை அருளும் வேதங்களாக இருப்பவனை, வெற்றியும் புகழும் உடையவர்கள் பலர் வாழ்கின்ற பெரிய ஊரான திருக்குருகூரைச் சேர்ந்த சடகோபனாகிய நம்மாழ்வார் குற்றங்கள் ஏதும் இன்றி தொழுது உரைத்த ஆயிரம் பாடல்களுள் இந்தப் பத்துப் பாடல்கள் தம்மைப் பாடுபவர்களை ஒலி நிறைந்த கடல் சூழ்ந்த உலகத்தில் முன்னேற்றி மீண்டும் பிறவா நிலையைக் கொடுக்கும்.

உரை:2

வியப்பாய வியப்பில்லா = வேறொரிடத்திலே கண்டால் ஆச்சரியப்படத்தக்கவையெல்லாம் இங்கே கண்டால் ‘இது என்ன ஆச்சரியம்’ என்று உபேக்ஷிக்கும்படியாயிருக்குமென்க. உலகத்தில் ஒருவனுக்கு நாலு பசுக்கள் கொடுத்தானென்றால் அது ஆச்சரியப்படத்தக்கதாயிருக்கும்; பெருமாள் ஒருவனுக்குப் பதினாயிரம் பிசுக்கள் கொடுத்தாரென்றாலும் ஆச்சரியப்படுதற்கு விஷயமில்லையே. ஸ்ரீராமாயண- அயோத்யா காண்டத்தில் முப்பத்திரண்டாம் ஸர்க்கத்திற் கூறப்பட்டுள்ள த்ரிஜட வ்ருத்தாந்தம் இங்கு ஸ்மரிக்கத்தக்கதாகும். மெய்ஞ்ஞான வேதியனை = உள்ளது உள்ளபடியே பிரதிபாதிக்குமதான வேதத்தினால் போற்றப்படுபவன் என்க. சாயப்புகழார் = ஜயம் என்ற வடசொல் சயமெனத் திரிந்தது; ஸம்ஸாரத்தை வென்று அதனால் புகழ்பெற்றவர்கள் (விரக்தர்கள்) பலர் வாழுமிடமாம் திருக்குருகூர்.

English Translation

This decad of the perfect thousand sons by Satakopan of Kurugur, -where godly men reside, -addresses the wonder-Lord extolled by the Vedas, Those who can sing it will break the cords of rebirth and secure heaven

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்