விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மறை ஆய நால் வேதத்துள் நின்ற*  மலர்ச் சுடரே,* 
    முறையால் இவ் உலகு எல்லாம்*  படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தா,*ய் 
    பிறை ஏறு சடையானும்*  நான்முகனும் இந்திரனும்* 
    இறை ஆதல் அறிந்து ஏத்த*  வீற்றிருத்தல் இது வியப்பே?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மறை ஆய - மறை பொருள்களையுடையவையான
நால் வேதத்துள் நின்ற - நான்கு வேதங்களுக்கும் உள்ளுறை பொருளாய் நின்ற
மலர் சுடரே - விகாஸத்தையுடைய சோதி வடிவானவளே!
முறையால் - முறைப்படி
இ உலகு எல்லாம் - இவ்வுலகங்களை யெல்லாம்

விளக்க உரை

உரை:1

மறையான நான்கு வேதங்களுக்கும் உட்பொருளாக நின்ற விரிந்த பேரொளியே! முறைப்படி இவ்வுலகங்களையெல்லாம் படைத்தீர்! வராகப் பெருமானாகி அவற்றை இடந்தீர்! பிரளய காலத்தில் அவற்றை உண்டீர்! பின்னர் உலகத் தோற்றக்காலத்தில் அவற்றையெல்லாம் உமிழ்ந்தீர்! வாமன திரிவிக்கிரமனாகி அவற்றை அளந்தீர்! பிறைதாங்கிய சடையை உடைய சிவபெருமானும் நான்முகனும் இந்திரனும் நீர் எல்லாவற்றையும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த சர்வஸ்வாமியாக இருப்பதை அறிந்து உம்மைப் போற்ற நீர் வீற்றிருப்பது என்ன வியப்போ? வியப்பில்லையே! 

உரை:2

பிரமன் முதலானாரும் உன் சேஷித்வத்தையறிந்து ஆச்ரயிக்குமாறு நீ யிருக்கு மிருப்பு ஆச்சரியமோ வென்கிறார். “மறையினுள் நின்ற” என்றாவது “நால்வேதத்துள் நின்ற” என்றாவது சொன்னால் போதுமே; ‘மறையாய நால்வேதம்’ என்பானேன்? என்னில்; கேண்மின்; வேதம் என்றாலும் மறை என்றாலும் பர்யாயம் எனினும் அர்த்தஸக்தியில் வாசியுண்டு; வேதம் என்றால் விளங்கக்காட்டுவது என்று பொருள்;மறை என்றால் மறைத்துக் காட்டுவது என்று பொருள். ஆஸ்திகராயிருப்பாருக்குத் தன் அர்த்தங்களை வெளியிட்டு காட்டுதலால் வேதம்; பாஹ்யராய் நாஸ்திகரா யிருப்பார்க்கு மறைத்தலால் மறை; ஆகவே, மறையாய நால்வேதமென்றது தகுதியே. “துஷ்ப்ரக்ருதிகளுக்கு மறையாய் ஸத்ப்ரக்ருதிகளுக்கு வேதமாயிருக்கும்” என்றார் பெரியவாச்சான்பிள்ளையும்.

English Translation

O Radiant lotus-Lord extolled by the Vedas! You ate, made, remade, lifted, and strode the Earth! Even if Siva, Brahma and indra stand and worship, would your wonder ever stand exhausted?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்