விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மழுங்காத வைந் நுதிய*  சக்கர நல் வலத்தையாய்,* 
    தொழும் காதல் களிறு அளிப்பான்*  புள் ஊர்ந்து தோன்றினையே,* 
    மழுங்காத ஞானமே*  படை ஆக மலர் உலகில்* 
    தொழும்பாயார்க்கு அளித்தால்*  உன் சுடர்ச் சோதி மறையாதே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தொழும் காதல் - தொழவேணுமென்கிற காதலையுடைய
களிறு - கஜேந்திராழ்வானை
அளிப்பான் - காப்பதற்காக
மழுங்காத வைநுதிய சக்கரம் நல் வலத்தையாய் - மங்குதலில்லாத கூர்மை பொருந்திய வாயையுடைய சக்கரப்படையை அழகிய வலத்திருக்கையிலுடையையாய்
புள் ஊர்ந்து - பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு

விளக்க உரை

உரை:1
 
தொழ வேண்டும் என்ற பெரும் காதல் உணர்வுடன் இருந்த களிறு ஆகிய கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றுவதற்காக, மழுங்குதல் இல்லாத கூர்மை பொருந்திய வாய்களை உடைய சக்கரத்தை வலக்கையில் ஏந்தி, கருடப்பறவையின் மேல் ஏறி, யானை துன்பமடைந்து கொண்டிருந்த மடுக்கரையில் தோன்றினீர்! அது பொருந்தும்! உமது மழுங்காத ஞானமே கருவியாகக் கொண்டு அனைத்தையும் நடத்திக் கொள்ளலாமே! விரிந்து பரந்த உலகில் தொழும் அடியவர்களுக்கு உதவுவதற்கு நேரில் வந்து தோன்றினால் உமது பெரும் பேரொளி குன்றி விடாதா? 
 
உரை:2
 
            எம்பெருமானது ஸௌலப்யாதிசயத்திலீடுபட்டுப் பேசுகிற பாசுரமிது. எம்பெருமானுடைய திருவவதாரங்களுக்கு மூன்று வகையான பிரயோஜனங்கள் பேசப்பட்டுள்ளன. *பரித்ராணாய ஸாதுநாம் விநாஸாய ச துஷ்க்குதாம், தர்மஸம்ஸ்தாப நார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே. *என்று சிஷ்டர்களைக் காத்தல், துஷ்டர்களைத் தொலைத்தல், அறநெறியைத் தாபித்தல் என மூவகைப்பட்ட காரியங்களுக்காக எம்பெருமான் அப்போதைக்கப்போது திருவவதாரங்கள் செய்தருள்வதாகச் சொல்லப்பட்டது. இங்ஙனம் மூவகையாகச் சொல்லப்பட்டுள்ள பிரயோஜனங்களை ஆராய்ந்து பார்க்குமளவில் மூன்றுங் சேர்ந்து ஒரே பிரயோஜனமாகத் தேறும்; “பரித்ராணாயஸாதூநாம்” என்பதனாற் சொல்லப்பட்ட ஸாதுஜந ஸம்ரக்ஷணமாகிய காரியம் துஷ்ட நிக்ரஹத்தையும் தர்மஸம்ஸ்தாபநத்தையும் உறுப்பாகக் கொண்டதாதலால் ஸாது பரித்ராண மென்பதொன்றே அவதாரப்ரயோஜநமென்றதாகும். ஸாதுக்களை ஸம்ரக்ஷிக்க வேண்டில் அதற்காக எம்பெருமான் அவதாரம் செய்ய வேணுமோ? ஸகல ஜகத்ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹாரங்களையெல்லாம் ஸங்கல்ப லவலேஸத்தாலே நிர்வஹித்துப் போருகின்ற பரம சக்தியுக்தனான எம்பெருமான் அந்த ஸங்கல்பத்தைக் கொண்டே ஸாது பரித்ராணமும் செய்தருளக் கூடாமையில்லையே; “மஹர்ஷிகள் வாழ்க; ராவணாதிகள் மாள்க.” என்று பரமபதத்தில் வீற்றுருந்தபடியே ஸங்கல்பிக்குமளவால் தலைக்கட்டமாட்டாத காரியமல்லையே,அப்படியிருக்க, ஏதுக்கு நாட்டில் பிறந்து படாதன படவேணும்? என்று பலர் சங்கிப்பதுண்டு: அந்த சங்கைக்குப் பரிஹாரமாக இரா நின்றது இப்பாசுரம்

English Translation

O Lord, you came riding on the Garuda bird and saved the devotee-elephant with your discus. What if all your devotees became illumined, would that exhaust your glory?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்