விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாசூணாச் சுடர் உடம்புஆய்*  மலராது குவியாது,* 
    மாசூணா ஞானம் ஆய்*  முழுதும் ஆய் முழுது இயன்றாய்,*
    மாசூணா வான் கோலத்து*  அமரர் கோன் வழிப்பட்டால்,* 
    மாசூணா உனபாத*  மலர்ச் சோதி மழுங்காதே?     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாசு! உணா -அவத்யம் சிறுதுமில்லாமல்
சுடர் - சோதிமயமான
உடம்பு ஆய் - திருமேனியை யுடையனாய்
மலராது குவியாது - ஸங்கோச விகாஸங்களற்று
மாசு உணா - (ஸம்சயம் விபரீதம் முதலான) அவத்யமில்லாத

விளக்க உரை

உரை:1
 
குற்றமே அடையாத ஒளிவீசும் திருமேனியுடன், கூடாது குறையாது குற்றமே அடையாத பேரறிவுடன், எல்லாப் பொருட்களும் ஆகி, அனைத்திற்கும் அடிப்படையானீர்! அப்படி இருக்க குற்றமில்லாத உயர்ந்த கோலம் கொண்ட தேவர் தலைவன் உம்மை வழிப்பட்டால் உமது குற்றம் அடையாத திருப்பாத மலர்களின் பேரொளி மழுங்கிவிடுமே! 
 
உரை:2
 
சிவபிரானைச் சொன்னபிறகு அவனிலும் கீழ்ப்பட்டவனான இந்திரனை யெடுத்துரைக்க ப்ரஸக்தி யில்லாமையாலே இந்திரனென்கிற பொருள் ஏலாது. அமரர்களனைவர்க்கும் நான்முகன் கோனாதலால் அந்த நான்முகனை இங்கு விவக்ஷிப்பதாக நிர்வஹிப்பாருண்டு. கீழ்ப்பாட்டில் “அரன்முதலா” என்றிருப்பதனாலே நான்முகனும் அவ்விடத்திலேயே ஸங்கரஹிக்கப்பட்டவனாகக் கூடுமென்று திருவுள்ளம் பற்றிய பட்டர் இங்கு அமரர்கோன் என்பதற்கு விலக்ஷணனாய் உத்ப்ரேக்ஷாஸித்தனான ஒருபிரமனைப் பொருளாகப் பணிப்பராம். ப்ரஸித்தனான பிரமன், ப்ரஹ்ர பாவகைகர்ம பாவகை என்ற இரண்டு பாவகைகளையுடைனாயிருப்பன்; இப்படியல்லாமல் ப்ரஹ்ம பாவநை யொன்றையேயுடையனான வொரு பிரமன் இருப்பதாக வைத்துக் கொள்வோம்; அவன் ஏத்தினாலும் அவத்யமேயாகும் என்கிறார். இப்பாட்டால்- என்பது பட்டருடைய திருவுள்ளம்.

English Translation

O Constant Lord with a frame of pure radiance! O Lord of perfect knowledge, O whole Being ! Even if the king of celestials were to sing your praise, the radiance of your lotus feet will never diminish.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்