விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வேடர் மறக்குலம் போலே*  வேண்டிற்றுச் செய்து என்மகளைக்* 
  கூடிய கூட்டமே யாகக்*  கொண்டு குடி வாழுங் கொல்லோ?* 
  நாடும் நகரும் அறிய*  நல்லது ஓர் கண்ணாலம் செய்து* 
  சாடு இறப் பாய்ந்த பெருமான்*  தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வேடர் - வேடர்களையும்;
மறக்குலம் போலே - மறவர் என்கிற நீச ஜாதியரையும் போலே;
என் மகளை - (ஸத்குலத்திற் பிறந்த) என் பெண்பிள்ளையை;
வேண்டிற்று செய்து- – தன் இஷ்டப்படி செய்து;
கூடிய கூட்டமே ஆகக்கொண்டு - தம்பதிகளாகிய இருவரும் நெஞ்சு பொருந்திக் கூடின கூடுதலையே விவாஹமாஹக் கொண்டு;

விளக்க உரை

என் மகளோவென்றாள் வேடரையும் மறக்குலத்தாரையும் போல் தண்ணிய ஜாதியிற் பிறந்தவளல்லள்; மஹாகுலப்ரஸுதையான இவளைக் கண்ணபிரான் களவுவழியாற் கொண்டு போனானாகிலும் போனவிடத்தில் விவாஹோத்ஸவத்தையாகிலும் முறை வழுவாமல் லோகாந்தமாகச் செய்தானாகில் ஒருவாறு குறைதீரப்பெறலாம்; இவளை இங்கிருந்து கொண்டுபோகிறபோது வழியிடையில் இருவரும் நெஞ்சுபொருந்திக் கூடுகையாகிற காந்தருவ விவாஹந்தன்னையே சாஸ்த்ரோக்தமான விவாஹோத்ஸவமாக நினைத்து வேறுவகையான விவாஹஸம்ப்ரமங்களை வெளிப்படையாகச் செய்யாதொழிவனோ? அன்றி திருவாய்ப்பாடியிலுள்ளாரையும் அதைச்சேர்ந்த, மதுரை முதலிய நகரங்களிலுள்ளாரையும் வரவழைத்துப் பலரறியப் பாணிக்ரஹணம் பண்ணிக் கொள்வனோ? என்று ஸம்சயிக்கிறபடி. அகத்தமிழில், “அறநிலை ஒப்பே பொருள்கொள் தெய்வம், யாழோர் கூட்டம் அரும்பொருள் வினையே, இராக்கதம் பேய்நிலை என்று கூறிய, மறையோர் மன்ற லெட்டிவை அவற்றுள், துறையமை நல்யாழ்ப்புலமையோர் புணர்ப்புப் பொருண்மை யென்மனார் புலமையோரே” என்று விவாஹம் எட்டுவகையாக்க் கூறப்பட்டுள்ளது; “??????????????????? ???????????????????” என்பர் வடநூலாரும். தனியிடத்து இருவரும் காம்மோஹத்தாலேகூடுகை, யாழோர்கூட்டம் (காந்தர்வ்விவாஹம்) எனப்படும்; இது ச்ருங்காரரஸமுமாய், ஸ்த்ரீயினுடைய அந்ந்யார்ஹதாரூபமான கற்புக்கும் முதலாகையாலே அகத்தமிழ்மரியாதைக்குப் பிரதானமாய்ப் போரும். “அன்பினைந்தினைக் களவெனப்படுவ, தந்தணர்ருமறை மன்றவெட்டினுள், கந்தருவ்வழத்த மென்மனார் புலவர்” என அகத்தமிழிலும் கூறப்பட்டது. இப்படி சாஸ்த்திரியாய் கற்பதரு முறுப்பான ஸம்பந்த்த்தாலே, ஆழ்வார் தம்முடைய அந்ந்யார்ஸத்வத்தை வெளியிட்டவாறென்க. [வேடர் இத்யாதி.] “கள்ளர், பள்ளிகள் என்னுமாபோலே, வேடர் மறவர் என்கிறதும் தண்ணியஜாதியில் அவாந்தரபேதம்” என்ற வியாக்கியானமறிக. இத்தண்ணியசாதியிற் பிறந்த பெண்களை கொள்வார், கூடிய கூட்டமேயாகக்கொண்டு கூடிவாழ்வது சாதிவழக்கமென்க. வேண்டிற்றுச் செய்து-இரண்டு தலையிலுமுண்டான குடிப்பிறப்பைப் பாராதே, ஒரு சாஸ்த்ரமறியாதையின்றியே தனக்கு வேண்டினபடி செய்து என்றபடி

English Translation

Will the Lord who toppled that cart to what he wants with my daughter and,--like hunters and jungle-men,--take union as sufficient for living together, or will he take her hand in proper marriage with fitting celebration, letting the town and country know? O, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்