விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாழ்த்துவார் பலர் ஆக*  நின்னுள்ளே நான்முகனை,* 
  மூழ்த்த நீர் உலகு எல்லாம்*  படை என்று முதல் படைத்தாய்*  
  கேழ்த்த சீர் அரன் முதலாக்*  கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,* 
  சூழ்த்து அமரர் துதித்தால்*  உன் தொல் புகழ் மாசூணாதே?     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வாழ்த்துவார் பலர் ஆக - துதிப்பவர்கள் பலருண்டாவதற்காக,
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று - ‘காரண ஜலமான ஏகார்ணவத்துக்குள்ளே லோகங்களையெல்லாம் உண்டாக்குவாயாக’ என்று சொல்லி.
நின்னுள்ளே - உன்னுடைய ஸங்கல்பத்திலே
நான்முகனை - பிரமனை
முதல் படைத்தாய் - முந்துற ஸ்ருஷ்டித்தவனே!

விளக்க உரை

உரை:1

ஞானத்திற் சிறந்த பலபேர்கள் திரண்டு ஏத்தினாலும் அதுவும் பகவத் குணங்களுக்குத் திரஸ்காரமாகவே தலைக்கட்டு மென்கிறார். (“வாழ்த்துவார் பலராக”) இதில் ஆக என்பதை வினையெச்சமாகக் கொண்டு, ‘உன்னைத் துதிப்பவர்கள் பலர் உண்டாவதற்காக’ என்று பொருளுரைப்பர் பலர்; பட்டர் அங்ஙனன்றியே ஆக என்றவிதனை வியங்கோள் வினைமுற்றாகக் கொண்டு “வாழ்த்துகின்றவர்கள் பலபேர்கள் இருக்கட்டுமே” என்று பொருளுரைப்பராம். எத்தனை பேர்கள் திரண்டு வாழ்த்தினால்தானென்ன? வேதங்களிற் காட்டிலும் ஏற்றமாகத் துதிக்க வல்லார் யாருமிலரே? என்பது பட்டர் நிர்வாகத்தின் கருத்து. (நின்னுள்ளே யித்யாதி.) பெருமானே! உன்னாலே ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிரமனாலே ஸ்ருஷ்டிக்கப்பட்டவர்களா உன்னுடைய திருக்குணங்களை வருணிப்பதற்கு உரியார்? “சங்கராத் ஜ்ஞாநமந்விச்சேத்” என்றபடி சிவபிரான் ஞானத்திற் சிறந்தவனேயாயினும் அவனுமுட்பட மற்றும் பல அமரர்களும் திரண்டு ஏத்தினாலும் அவத்யமேயாகுமென்றாராயிற்று. சூழ்ந்து- ஒவ்வொருவர் ஒவ்வொரு குணத்தை வருணிப்பதாக வைத்துக் கொண்டு என்றும், திரள் திரளாகக்கூடி என்றும் பொருள்படும்.

உரை:2

பெருகி இருக்கும் பிரம்மாண்ட நீரில் இருந்து உலகங்களையும் உலகமக்களையும் படைப்பாய் என்று உமக்குள்ளிருந்து தோன்றிய தாமரையில் நான்முகனைப் படைத்தீர்! பலர் உம்மை வாழ்த்துவார்களாக இருக்கிறார்கள்! மிகச் சிறந்த ஞானம் முதலிய குணங்களை உடைய அரன் முதலாகச் சொல்லப்படும் தெய்வங்கள் எல்லாம் உமது குணங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு பல்வேறாகப் போற்றித் துதிக்கிறார்கள்! அப்படித் அவர்கள் துதித்தால் உமது தொன்மையான புகழ் அவ்வளவு தான் என்று ஆகிவிடாதோ? உம்மால் படைக்கப்பட்ட பிரமதேவனால் படைக்கப்பட்டவர்கள் எப்படி உமது தொன்மையான புகழைப் பாட முடியும்? அப்படி அவர்கள் பாடினால் உமது தொல் புகழ் மாசு பெற்றுவிடுமே!

 

English Translation

O Lord who willed Brahma the maker and Siva too! What though your praise-singer be many? Even if they and the hordes of gods come and sing,. Your effulgent glory cannot come to and end.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்