விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கிறி என நினைமின்*  கீழ்மை செய்யாதே,* 
    உறி அமர் வெண்ணெய்*  உண்டவன் கோயில்,*
    மறியொடு பிணை சேர்*  மாலிருஞ்சோலை,* 
    நெறி பட அதுவே*  நினைவது நலமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உறி அமர் – உறிகளிலே அமைத்துவைத்த வெண்ணெயை
உண்டவன் – அமுது செய்த கண்ணபிரானுடைய
கோயில் – ஆலயமாய்
மறியோடு பிணைசேர் – தம் குட்டிகளோடுகூட மான்பேடைகள் சேர்ந்து வாழப்பெற்ற
மாலிருஞ்சோலை – திருமலையினுடைய

விளக்க உரை

திருமலைக்குப் போகிற மார்க்கமுண்டே, அதனைச் சிந்திப்பது தானும் போது மென்கிறார். ஸ்ரீக்ருஷ்ணனாகத் திருவவதரித்துத் தன்னுடைய ஸௌலப்ய ஸௌசீல்யாதி குணாதிசயங்களைக் காட்டியருளின பெருமான்தானே, பிற்பட்டவர்களும் இழவாமைக்காக இப்போது திருமலையில் நித்யஸந்நிதி பண்ணியிராநின்றானென்பது இரண்டாமடியின் கருத்து. விஷயாந்தர ப்ராவண்யத்திலே நெஞ்சைச் செலுத்தாமல் திருமாலிருஞ்சோலையாத்திரை வழியிலே நெஞ்சைச் செலுத்துங்கோள் என்றாராயிற்று. திருமலைக்கு மறியொடு பிணைசேர் என்ற அடைமொழி கொடுத்து ஸாபிப்ராயம், அங்குக் குட்டியுந் தாயும் பிரியா திருத்தல்போல, நாமும் தாயுந் தந்தையுமாயிவ்வுலகினில் வாயுமீசனைப் பிரியாதிருத்தல் நன்று என்று காட்டியவாறு. ஈற்றடியில் நெறிபட என்பதை ஒரு முழுச் சொல்லாகக் கொண்டு ‘நன்றாக‘ என்றும் கொள்வர், திருமாலிருஞ்சோலையை நன்றாகச் சிந்திப்பது நலம் என்றவாறு.

English Translation

Think! Do not stoop to lowly acts. The Lord who stole butter lives in Malirumsolai in groves amid sporting does and fawns. Contemplating his worship is the only good.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்