விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கரும வன் பாசம்*  கழித்து உழன்று உய்யவே,* 
  பெருமலை எடுத்தான்*  பீடு உறை கோயில்,*
  வரு மழை தவழும்*  மாலிருஞ்சோலைத்,* 
  திருமலை அதுவே*  அடைவது திறமே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விளக்க உரை

ஒருவர்க்கும் எளிதில் கழித்துக்கொள்ள முடியாத கரும பந்தங்களைக் கழிப்பதற்கும், அவை கழிந்து அடிமை செய்து வாழுகைக்குமாகவே எம்பெருமான் ஸந்நிதி பண்ணியிருக்கிற திருமலையை யடைவதே தகுதியென்கிறார். முதலடியில் உய்ய என்கிற வினையெச்சம் (இரண்டாமடியில்) உறை என்ற வினையைக் கொண்டு முடியும். பீடுறை – பீடு தோற்ற உறையுமிடம், பீடுடனே உறையுமிடம் என விரிக்க பீடு –பெருமேன்மை. வருமழைதவழும் – இங்கு ‘மழைதவழும்‘ என்பதே போதுமாயிருக்க, வரு என்ற அடைமொழி கொடுத்த ஸ்வாரஸ்யத்தை நம்பிள்ளை காட்டியருளுகிறார் காண்மின் – “ஊருக்கு இரண்டாயிற்று மழை, நின்றவிடத்திலே நின்று வர்ஷிப்பதொரு மேகமும், போவது வருவதாயிருப்பதொருமேகமும்“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.

English Translation

The Lord ho lifted the mountain lives gracefully in maliumsoali, shwere rain clouds pass kenealing low. He breaks the cords of Karmas, so join him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்