விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சதிர் இள மடவார்*  தாழ்ச்சியை மதியாது,* 
  அதிர் குரல் சங்கத்து*  அழகர் தம் கோயில்,*
  மதி தவழ் குடுமி*  மாலிருஞ்சோலைப்,* 
  பதியது ஏத்தி*  எழுவது பயனே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சதிர் - அழகு பொருந்திய
இள மடவார் - இளம் பருவத்துப்பெண்களிடத்து
தாழ்ச்சியை - ஆழய்காற்படுவதை
மதியாது - ஒரு பொருளாக நினையாமல்
அதிர்குரல் சங்கத்து - முழங்குகின்ற ஓகையையுடைய சங்கு ஒலிக்கப்பெற்ற

விளக்க உரை

மதிதவழ்குடுமி என்றதையும் ஆழ்வான் அந்த ச்லோகத்திலேயே “சசதரரிங் கணாட்யசிகம்“ என்று மொழி பெயர்த்திருகின்றமை காண்க. மாலிருஞ் சோலைப்பதி – மாலிருஞ் சோலையாகிற பதி என்றும், மாலிருஞ் சோலையிலுள்ள பகவந்மத்திரம் என்றும் கொள்ளலாம்.

English Translation

Ignoring the sweet calls of young maidens, it is wise to rise and worship the thundering discus-Lord of Malirumsolai, in his temple kissed by the Moon.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்