விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கிளர் ஒளி இளமை*  கெடுவதன் முன்னம்,* 
  வளர் ஒளி மாயோன்*  மருவிய கோயில்,*
  வளர் இளம் பொழில் சூழ்*  மாலிருஞ்சோலை,* 
  தளர்வு இலர் ஆகிச்*  சார்வது சதிரே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கிளர் ஒளி - மேன்மேலுங் கொழுந்து விட்டுக் கிளர்கின்ற ஞானவொளியையுடைய
இளமை - இளம்பிராயம்
கெடுவதன் முன்னம் - அழிவதற்குள்ளே
வளர் ஒளி - குன்றாத தேஜஸ்ஸையுடையனான
மாயோன்- எம்பெருமான்

விளக்க உரை

வளரிளம்பொழில் சூழ்மாலிருஞ்சோலை யென்பதைக் கூரத்தாழ்வான் ஸூந்தரபா ஸூஸ்தவத்தில் அப்படியே மொழிபெயர்த் தருளியிருக்கின்றார்-“வர்த்திஷ்ணு பாலத்ருமஷண்ட மண்டிதம் வநாசலம்” என்று திருமாலிருஞ்சோலை-நூற்றெட்டுத் திருப்பதிகளுள் பாண்டியநாட்டுத் திருப்பதி பதினெட்டில் ஒன்றும், வநகிரி என்று வடமொழியிற் கூறப்படுவதும், ‘கோயில் திருமலை பெருமாள் கோயில் அழகர் திருமரை’ என்று சிறப்பாக எடுத்துப் கூறப்படுகின்ற நான்கு திருப்பதிகளுள் ஒன்றும், ‘இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை யென்னும் பொறுப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்” என்றபடி ஆன்றோர் கொண்டாடப்பெற்ற மஹிமையுடையதுமானதொரு திவ்ய தேசம். “ஆயிரம் பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே” என்றபடி மிகப் பெரிய பல சோலைகளையுடைய மலையாதலால் “மாலிருஞ்சோலைமலை” என்று திருநாமமாயிற்று. மால்-பெருமை; இருமை-பெருமை, இவ்விரண்டும் தொடர்ந்து ஒரு பொருட்பன்மொழியாய் நின்றன. மால் என்று உயர்ச்சியாய், இருமை என்று பரப்பைச்சொல்லிற்றாய். உயர்ந்துபரந்த சோலைகளையுடைய மலையென்றலு முண்டு.

English Translation

Ere the radiance of youth fades, it is wise to go without firing, to Malirumsolai, the temple of the radiant Lord amid fertile groves.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்