விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விடல் இல் சக்கரத்து*  அண்ணலை மேவல்* 
    விடல் இல் வண் குருகூர்ச்*  சடகோபன்,*
    கெடல் இல் ஆயிரத்துள்*  இவை பத்தும்,* 
    கெடல் இல் வீடு செய்யும்*  கிளர்வார்க்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விடல் இல் - விடுதலில்லாத
சக்கரத்து -  திருவாழியையுடைய
அண்ணலை - எம்பெருமானை
மேவல் விடல் இல் - பொருந்துவது ஒரு போதும் விடாமலிருக்கப் பெற்ற
வண்குருகூர்சொல் - சடகோபன் அருளிச் செய்த

விளக்க உரை

இத்திருவாய்மொழியை ஓதவே, இதுதானே புருஷார்த்தத்தைப் பெறுவிக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். கீழ்ப்பாட்டில் “என்னை எஞ்ஞான்றும் விடல்” என்று வேண்டின ஆழ்வாரை நோக்கி, எம்பெருமான் ‘ஆழ்வீர்! நாம் விட்டுவிடுவோமோ என்கிற அதிசங்கை உமக்கு ஏன் உண்டாயிற்று? நாம் உம்போல்வாரைக் கைவிடுவதற்கா கையில் சக்கரப்படை தாரித்திருப்பது? ‘எப்போதும் கையழலாநேமியான நம்மேல் வினைகடிவான்’ என்று அடியிலே நீர்தாமும் சொல்லியிருக்கிறீரே! என்று கையில் திருவாழி யாழ்வாரனைக் காட்டினான்; கண்டு “விடலில் சக்கரதண்ணலை மேவல் விடலில் வண்குருகூர்ச் சடகோபன்” என்கிறார். இவை பத்தும் என்பது எழுவாய். இத்திருவாய்மொழிதானே மோக்ஷமளிக்கும் என்கிறார். இப்பதிகமே மோக்ஷேபாயமென்றால், இது பொருந்துமோ? உபாயத்வமென்பது எம்பெருமானொருவனுக்கே உரியதென்று நூற்கொள்கையல்லவா? என்று சிலர் சங்கிப்பர்கள். இப்பதிகமே மோக்ஷமளிக்குமென்றால், இது ஸாட்ஷாத்தாக உபாயம் என்று சொன்னபடியன்று. இப்பதிகத்தை அநுஸந்திக்கவே எம்பெருமான் திருவுள்ளத்தில் மிக்க உவப்பு உண்டாகி, அதனால் அவன் மோக்ஷமளிக்கலாகும் என்று தெரிவித்தபடி. புருஷகாரக்ருத்யம் பண்ணி எம்பெருமானை உகப்பித்து அவன் வழியாகப் பேறுபெறுவிக்கின்ற பிராட்டி விஷயமாக” வோரிமாறாத பூமேலிருப்பாள் வினை தீர்க்குமே” என்றருளிச் செய்திருப்பதும், இவ்வழியாலே பொருந்தும். இனி இதன் விரிவை நம்முடைய ஸதாசார்ய ஸூக்திரட்ஷா என்கிற நூலிற் காண்க.

English Translation

This decad of the everlasting thousand songs by eager satakopan of Kurugur city addressing the invincible discus Lord will secure liberation for those who sing it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்