விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏறேல் ஏழும்*  வென்று ஏர் கொள் இலங்கையை,* 
    நீறே செய்த*  நெடுஞ் சுடர்ச் சோதி,*
    தேறேல் என்னை*  உன் பொன் அடி சேர்த்து*  ஒல்லை- 
    வேறே போக*  எஞ்ஞான்றும் விடலே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏழும் - ஏழு காளைகளையும்
வென்று - வலியடக்கினவனாயும்
ஏர்கொள் இலங்கையை - அடகு நிரம்பிய லங்காபுரியை
நீறு செய்த - நீறாக்கினவனாயுமுள்ள
நெடும் சுடர் சோதி - மஹா தேஜஸ்வியான பெருமானே!

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் ஆழ்வார்தாம் கீழ்நாட்களில் இருந்த இருப்பைக்கூறி இழவுக்கு மிகவும் அநுபவித்து, இப்போது நல்லபடியாக இருக்கிற இருப்பையும் பேசினார்; அதுகேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்! இழந்தநாளைக்கு அநுதபிக்கின்ற உமக்கு, இனி இழவுநேர ப்ரஸக்தியில்லையே; ஆகவே வாழ்ந்துவிட்டீரன்றோ? இனி நான் செய்ய வேண்டுவது ஒன்றுமில்லையே’ என்றருளிச் செய்ய, பிரானே! அப்படி ஸாதிக்கலாமோ? என்னை வைத்திருக்குமிடம் எதுவென்று ஆராயவேண்டாவோ? இந்ரிநலத்திலே இருக்கின்ற என்னுடைய சித்தஸ்திதியை நம்பலாகுமோ? என்னைத் திருவடிவாரத்தில் சேர்த்துக் கொண்டாலொழிய நான் நிர்ப்பரனாயிரக்க முடியாது’ என்கிற கருத்தை இப்பாசுரத்தில் வெளியிடுகிறார், ‘உன்னோடு ஆசைப்பட்டவாகளின் பிரதிபந்தங்களைப் போக்குதல் உனக்கு அருமையன்று’ என்று காட்டவேண்டி இரண்டு சரீதைகளை யெடுத்துப் பேசுகிறார். ஏறு ஏல் ஏழும் என்ற விடத்து ஏல் அசை. ஏறு என்பதற்கு ஏல் என்பதை அடைமொழியாக்கி என்று கொண்ட ஏறு என்றலுமொன்று இது வாதிகேஸாரியின் நிர்வாஹம். என்று கொண்ட என்றது எதிரிட்டுவந்த என்றபடி. தேறேல் என்னை - இப்போது நான் “யானேநீ யென்னுடைமையும் நீயே” என்றிருப்பதுபோலவே முற்றிலும் இருப்பேனென்று நம்பாதே என்ற குறிப்பு.

English Translation

O Lord who killed the seven bulls, and destroyed the beautiful Lanka! Bind me quickly to your golden feet, and permanently, Or else I shall not live.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்