விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒரு மகள் தன்னை உடையேன்*  உலகம் நிறைந்த புகழால்* 
    திருமகள் போல வளர்த்தேன்*  செங்கண் மால் தான் கொண்டு போனான்* 
    பெரு மகளாய்க் குடி வாழ்ந்து*  பெரும்பிள்ளை பெற்ற அசோதை* 
    மருமகளைக் கண்டு உகந்து*  மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ?* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒரு மகள் தன்னை உடையேன்- – ஒரே மகளை உடையளாகிய நான்;
உலகம் நிறைந்த புகழால் - உலகமெங்கும் பாலின கீர்த்தியோடு.;
திரு மகள் போல - பெரிய பிராட்டியாரைப் போல்;
வளர்த்தேன்- – சீராட்டி வளர்த்தேன்;
செம் கண் மால் - செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரன்;

விளக்க உரை

அரிய நோன்புகளை நோற்று அத்விதீயையான பெண்பிள்ளையைப் பெற்ற நான், இவளை “காவியங்கண்ணி யெண்ணில் கடிமாமலர்ப்பாவையொப்பாள்” என்றபடி எல்லார்க்கும் வைலக்ஷண்யத்துக்கு உபமாந பூமியாகச் சொல்லக்கடவளான பிராட்டியோடொக்க, உலகத்தாரெல்லாரும் புகழும்படி வளர்த்தேன், இப்படி வளர்ந்த இவளை எம்பெருமான் தானே நேரில் வந்து கைக்கொண்டு போனான்; போகட்டும், அதைப்பற்றிச் சிந்தையில்லை;போனவிடத்தில் இவளுக்கு மாமியாரான யாசோதைப்பிராட்டி இவளுடைய ஸெளந்த்ர்யம் வ்யாமோஹம் முதலிய குணங்களைக்கண்டு “பெறாப்பேறு பெற்றோம்” என மகிழ்ந்து, கல்யாணப் பெண்ணுக்குச் செய்யவேண்டிய சீர்மைகளைக் குறையறச் செய்வளோ? அன்றி, லெளகிகத்துக்குத் தக்க வளவு அஹ்ருதயமாகச் செய்து விடுவளோ? என்று ஸம்சயிக்கின்றனள். கூரத்தாழ்வான் திருநாட்டுக் கெழுந்தருளிமபோது எம்பெருமானார் இப்பிஅட்டைச் சொல்லிக் கதறி அழுதார் என்ற ஐதிஹ்யமுணர்க. புகழால் வளர்த்தேன் என்றது-புகழுண்டாம்படி வளர்த்தேன் என்றவாறு. [செங்கண்மால் இத்யாதி.] என் மகளை இப்படி ரஹஸ்யமாகக் கைக்கொண்டு போதவற்கு ஸமயம் பார்த்துப் பல இரவுகளிற் கண்விழித்ததனால் செங்கண்மாலாயினன் என்று விசேஷார்த்தங் கூறலாம். திருவாய்ப்பாடியிலுள்ளார்க்கெல்லாம் தலைவரான நந்தகோபருடைய தேவியானமைபற்றி யசோதை பெருமகளெனப்பட்டாள். [பெரும் பிள்ளை.] ”என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப்பெற்ற வயிறுடையாள்” என்றது காண்க. மணாட்புறம் இப்பாசுரத்தை ஸம்ஸ்க்ருத ச்லோகமாக இயற்றுமாறு ஸ்ரீவானமாமலை ஸ்வாமி நியுமித்தருளினதைச் சிரமேற்கொண்டு இயற்றிய ச்லோகம் வருமாறு:-

English Translation

She was my only daughter. I brought her up like the very goddess of wealth, praised by the entire world. The lotus-eyed seducer came and took her away. When the matriarch Yasoda, mother of the praise worthy son, sees her daughter-in-law, will she receive her with affection and proper presents? O, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்