விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வந்த மதலைக்*  குழாத்தை வலிசெய்து* 
  தந்தக் களிறு போல்*  தானே விளையாடும்*
  நந்தன் மதலைக்கு*  நன்றும் அழகிய* 
  உந்தி இருந்தவா காணீரே* 
  ஒளியிழையீர்! வந்து காணீரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வந்த - (தன்னோடு விளையாட) வந்த;
மதலை குழாத்தை - சிறுபிள்ளைகளின் கூட்டத்தில்;
வலி செய்து - தன்வல்லமையைக் காட்டிக் கொண்டு;
தந்தம் களிறுபோல் - கொம்பு முளைத்த யானைக்குட்டிபோல்;
தானே - தானே முக்கியனாய் நின்று;

விளக்க உரை

உரை:1

தன்னுடன் விளையாட வந்த பெரிய குழுவாகிய குழந்தைகளை எல்லாம் வென்று தான் மட்டும் நிலையாக நின்று விளையாடும் நந்தனின் குழந்தையின் மிகவும் அழகிய தொப்புளைக் காணுங்கள்; ஒளி மிகுந்த அணிகளை அணிந்த பெண்களே வந்து காணுங்கள்.

உரை:2

கண்ணபிரான் தான் சிறு குழந்தையாயிருந்தாலும் தன்னோடு விளையாடுவதற்குக் கூட்டமாய் வரும் பாலகர்களையெல்லாம் தனது வல்லமையால் அடக்கி, அவர்களெல்லாம் ஒருபக்கமும், தான் மாத்திரம் ஒருபக்கமுமாக நின்று இப்படிதானே பிராதானனாய் நின்று விளையாடுவன்; அப்போதுதான் கொம்பு முளைக்கப்பெற்ற யானைக்குட்டியை த்ருஷ்டாந்தமாகச் சொல்லத்தகுந்திருப்பன்; இப்படிப்பட்டவனுடைய உந்தியைப் பாருங்களென்கிறாள்.

English Translation

Bright-jeweled Ladies, come here and see the perfectly beautiful navel of his child born to Nandagopa; like an elephant he plays with himself, ignoring the teams of children who have come to play.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்