விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  யானே என்னை*  அறியகிலாதே,* 
  யானே என் தனதே*  என்று இருந்தேன்,*
  யானே நீ*  என் உடைமையும் நீயே,* 
  வானே ஏத்தும்*  எம் வானவர் ஏறே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வானே ஏத்தும் - விண்ணுலகம் முழுவதும் துதிக்குமாறு உள்ள
எம் வானவர் ஏறே - நித்யஸூரிநாதனான எம் பெருமானே!
யானே - நான் தானே
என்னை - என்னை
அறிய கிலாதே - அறியமாட்டாமல்

விளக்க உரை

தேவரீருக்கும் எனக்கும் ஸ்ம்பந்தம் அநாதிஸித்தமர்கவேயிருந்தும், அந்தோ! நெடுநாளாக அதனை மறந்து அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு அநுதபிக்கிறார். பாசுரம் தொடங்கும் போதே யானே என்கிறார்; என்னாலே நான் கெட்டேன் என்கிறார், எம்பெருமான் என்னை வாரிப்பிடியாகப் பிடித்துக்கொள்ள எதிர் சூழல்புக்குத் திரியாநிற்க, நானே கிடீர்விநாசத்தைச் சூழ்த்துக்கொண்டேனென்கிறார். (என்னையறிய கிலாதே) ராஜகுமாரன் வேடன் கையிலே அகப்பட்டுத், தன் உண்மைத் தன்மையை மறந்து, வேடர்புதல்வனென்றே தன்னை நினைத்திருக்குமா போலே, நானும் ஸம்ஸார ஸாசரமத்யத் திலகப்பட்டு “திருமாலே நானுமுனக்குப்படிவடியேன்” என்கிற நிஜஸ்வரூபத்தை மறந்தேனென்கிறார். “நீர்நுமதென்றிவை வேர்முதல் மாய்த்து இறை சேர்மின்” என்று இப்போது சில நாளாக ஸம்ஸாரிகளுக்கு உபதேசமும் செய்வேனாம்படி திருந்தியிருக்கின்ற நான், அநாதி காலம் அஹங்காரமமகாரங்களினால் மாய்ந்து போனேனே யென்கிறார் யானே யென்றனதே யென்றிருந்தேன் என்பதனால். ‘ஒழிந்தகாலம் ஒழியட்டும் இப்போது எப்படியிருக்கிறீர்? சொல்லும்’ என்று எம்பெருமான் கேட்க; யானே நீ யென்னுடைமையும் நீயே யென்கிறார். இதனால் அத்வைதம் சொல்லுகிறதன்று; நான் உனக்கு அடிமைப்பட்டவன்; எனக்கென்று தனியே ஒரு பொருள் கிடையாது என்றபடி.

English Translation

Not knowing my true self, I thought I was my own. O, Radiant Lord worshipped by the celestials. Me and what is mine are yours!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்