விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எக்காலத்து எந்தையாய்*  என்னுள் மன்னில்,*  மற்று 
  எக் காலத்திலும்*  யாதொன்றும் வேண்டேன்,*
  மிக்கார் வேத*  விமலர் விழுங்கும்,*  என் 
  அக்காரக் கனியே*  உன்னை யானே.       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நிக்கார் - சிறந்தவர்களான
வேதம் விமலர் - வேதம் வல்ல பரமைகாந்திகள்
வழுங்கும் - (அன்பு மிகுதியினால்) விழுங்குப்படியாகவுள்ள
என் அக்காரக் கனியே - அக்காரக் கனிபோன்ற எம்பெருமானே!
எக்காலத்து - எப்போதும்

விளக்க உரை

எம்பெருமானோடு ஒரு க்ஷணகாலமாவது இப்போது சேரப் பெறுவானாயின் அது போதும் மறுபடியும் சேரவேணுமென்கிற விருப்பங்கூட எனக்கு உண்டாகாது என்கிறார்; இதனால் தம்முடைய அபிநிவேசத்தின் மிகுதி காட்டியவாறு. இப்பாட்டுக்கு இவ்வகையாகக் கருத்துக்கொள்ளுதல் ஆளவந்தாருடைய நிர்வாஹம். “மற்றெக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்” என்று மூலமுள்ளது. யாதொன்றும் என்பதில் இந்த ஸம்ச்லேஷத்தையும் சேர்த்து, இதையும் மறுபடி யொருகாலும் வேண்டேனென்பதாக ஆளவந்தார் நிர்வஹித்தாராம். இதை எம்பெருமானார் கேட்டருளி, பொருள் கூறுதல் பாங்காதலால் வேறுவனை கூறலாம் பெறிலும் பெறாதொழியிலும் சிறுகக் கோலமாட்டார் இவர்; ஆகலே ‘எக்காலத்திலும் மற்று யாதொன்றும் வேண்டேன்’- இந்த ஸம்ச்லேசஷம் தவிர வேறொன்றையும் நான் வேண்டமாட்டேன்’ என்று பொருள் கொள்ளுதல் பாங்கு என்றருளிச் செய்தாராம். ஸந்நிபாதஜ்வரத்திலே யிருந்தவர்கள் ‘ஒருகால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர் கிடைத்தால்போதும்’ என்பர்கள்; அதுபோல ஆழ்வார்சொல்லுகிறாராக ஆளவந்தாருடைய நிர்வாஹத்தின் போக்கு.

English Translation

O Sweet fruit enjoyed by Vedic seers; If you would only be my master and blend with me at all times, I shall seek nothing else from you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்