விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாராய்*  உன் திருப் பாத மலர்க்கீழ்ப்,* 
  பேராதே யான் வந்து*  அடையும்படி
  தாராதாய்,*  உன்னை என்னுள்*  வைப்பில் என்றும் 
  ஆராதாய்,*  எனக்கு என்றும் எக்காலே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திரு பாதம் மலர் கீழ் - திருவடித்தாமரைகளின் கீழ்
பேராதே - விலகாமல்
யான் வந்து அடையும்படி - நான் வந்து சேரும்படியாக
தாராதாய் - அருள் புரியாதவனே!
உன்னை என்னுள் என்றும் வைப்பில் - உன்னை என்னுள்ளே எந்நாளும் வைத்து அநுபவித்தாலும்

விளக்க உரை

வாராய் என்றபோதே வரக்காணாமையாலே வருந்தி, பின்னையும் அபிநிவேசத்தின் மிகுதியாலே, நான் சடக்கெய வுன்னைக்கிட்டும்படி வாராயென்கிறார். “உன்திருப்பாத மலர்க்கீழ்ப் பேராதே யான்வந்து அடையும்படி தாராதாய்!” என்று எம்பெருமானை விளிக்கிறார்; நாராயணா! மாதவா! என்னுமா போலே எம்பெருமானுக்கு இங்ஙனே ஒரு திருநாமம்போலும், அஞ்சிரைய மடநாராயில் “அருறாத நீர்” என்றதுபோலே, தேவரீரூடைய அளவுகடந்த போக்யதையை யெனக்குக் காட்டிவைத்து தேவரீரை எனக்கு அநபவிக்கத் தந்தருளாமலிருப்பது தகுதியோ? என்று கேட்பது விளியின் கருத்து. தந்தருளத்திருவுள்ள மில்லையாயின் நெஞ்சிலே பிரகாசித்துக் கொண்டிருக்குமிருப்பையாவது தவிர்த்துப் கொள்ளலாமே; அப்படியில்லாமே அகவாய் பெரிய திருநாளாய்ச் செல்லாநின்றதே யென்கிறார், உன்னையென்னுள் வைப்பில் என்று மாராதாய்! என்று.

English Translation

My Lord, you are sweet to my heart; you do not give enough of yourself to me. Come that I many firmly be bound to the soles of your lotus-feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்