விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சிறப்பில் வீடு*  சுவர்க்கம் நரகம்,* 
  இறப்பில் எய்துக*  எய்தற்க,*  யானும்
  பிறப்பு இல்*  பல் பிறவிப் பெருமானை,* 
  மறப்பு ஒன்று இன்றி*  என்றும் மகிழ்வனே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இறப்பில் - மரணமான பிறகு
சிறப்பில் வீடு - சிறப்புடன் கூடிய மோக்ஷத்தையோ
சுவர்க்கம் - ஸ்வர்க்கத்தையோ
நரகம் - நரகத்தையோ
எய்துக - அடைவேனாக

விளக்க உரை

உரை:1

இறைவனை நினைப்பது மட்டும் அன்றி, அவனுக்கு வேண்டிய தொண்டுகளையும் செய்யவிரும்புகின்றார் ஆழ்வார். இன்னதொண்டு தான் செய்வது என்ற நியதியின்றி, இறைவனுக்குரிய எல்லாத் தொண்டுகளையும் செய்தல் வேண்டும்; அத்தொண்டுகளை ஒரு காலம் செய்து, பின் விடுவது என்றில்லாமல், எப்போதும் செய்தல் வேண்டும் என்று விரும்புகின்றார். ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்று தொடங்குகின்ற திருவாய்மொழி இக்கருத்தையே விரிவாகக் கூறுகின்றது. ‘அங்ஙனம் எல்லாத் தொண்டுகளையும் செய்யுமிடத்தும் அவற்றை என் விருப்பத்திற்காகச் செய்தல் ஆகாது; அவன் விருப்பத்திற்காகவே செய்தல் வேண்டும்; யான் செய்யும் தொண்டைக் கண்டு எம்பெருமான் மகிழ்ச்சியடைந்தால், அம்மகிழ்ச்சியைக் காண்பதே எனக்குப் பேரின்பமாகும்,’ என்று கூறுகின்றார்.

உரை:2

யானும் சிறப்புடைய மோக்ஷம் என்ன, சுவர்க்கம் என்ன, நரகம் என்ன இவற்றை இறக்கின்ற காலத்தில் பொருந்துக. பொருந்தாதொழிக; பிறப்பு இல்லாத பல பிறவிகளையுடைய பெருமானை மறதி என்பது சிறிதும் இல்லாமல் எப்பொழுதும் அனுபவிப்பேன்.

English Translation

Whether or not I find liberation, whether I go to heaven or to hell on dying, I will joyously remember my birthless. Lord who came in his many forms on Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்