விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  செய்யேல் தீவினை என்று*  அருள் செய்யும்,*  என் 
  கை ஆர் சக்கரக்*  கண்ண பிரானே,*
  ஐ ஆர் கண்டம் அடைக்கிலும்*  நின் கழல் 
  எய்யாது ஏத்த,*  அருள்செய் எனக்கே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தீ வினை செய்யேல் என்று - கெட்ட காரியங்களைச் செய்யாதே என்று
அருள் செய்யும் - (என் திறத்தில்) கிருபை செய்தருளின
கை ஆர்சக்கரம் - திருக்கையில் பொருத்தின திருவாழியை உடைய என் கண்ணபிரானே!
ஐயார்கண்டம் அடைக்கிலும் - கோழை வந்து கழுத்தையடைக்கும்படியான துர்த்தசை நேர்ந்தாலும்

விளக்க உரை

‘கொடிய பாவங்களைச் செய்யாதே’ என்று திரு அருளைச் செய்கின்ற, கையிலே தரித்திருக்கின்ற சக்கரத்தையுடைய என் கண்ணபிரானே! கோழையானது கழுத்தை அடைக்கின்ற அக்காலத்திலும் நின் திருவடிகளை மறவாமல் ஏத்தும்படி எனக்கு அருள் செய்க.

English Translation

O Krishna, Lord wielding the discus, guarding me against evil deeds! Grant that I may praise your feet forever, even when phlegm chokes my lungs.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்