விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எம்மாவீட்டுத்*  திறமும் செப்பம்,*  நின் 
    செம்மா பாடபற்புத்*  தலைசேர்த்து ஒல்லை,-
    கைம்மா துன்பம்*  கடிந்த பிரானே,* 
    அம்மா அடியேன்*  வேண்டுவது ஈதே.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கைம்மா துன்பம் கடிந்த பிரானே - கஜேந்திராழ்வானுடைய இடரைத் தீர்த்த பிரபுவே!
நின் - தேவரீருடைய
செம் - சிவந்த
மா - மேன்மை தங்கிய
பாதபற்பு - பாதபத்மங்களை

விளக்க உரை

கையையுடைய யானையினது துன்பத்தை நீக்கிய உபகாரகனே! ஸ்வாமியே! எத்தகைய பெரிய மோக்ஷத்தின் தன்மையைப் பற்றியும் பேசோம்; நினது சிவந்த பெருமை பொருந்திய திருவடித் தாமைரைகளை என் தலையின்மீது விரைவில் சேர்க்கவேண்டும்; அடியேன் விரும்புவது இப்பேறேயாகும்.

English Translation

My Lord, you ended Gajendra's woes! I seek no heaven for myself. Grant me your lotus-red feet to wear on my head, Quick!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்