விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கண் தலங்கள் செய்ய*  கரு மேனி அம்மானை,* 
  வண்டு அலம்பும் சோலை*  வழுதி வள நாடன்,*
  பண் தலையில் சொன்ன தமிழ்*  ஆயிரத்து இப் பத்தும் வலார்,* 
  விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர்*  எம் மா வீடே.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சுண் தலங்கள் செய்ய - திருக்கண்கள் சிவந்திருக்கப் பெற்றவனாய்
கரு மேனி - காரிய திருமேனியை யுடையனான
அம்மானை - ஸ்வாமி விஷயமாக
வண்டு அலம்பும் சோலை வளம் வழுதி நாடன் -
வண்டுகள் ஒலிக்கின்ற சோலை வளம் பொருந்திய திருவழுதி நாட்டுக்குத் தலைவரான ஆழ்வார்
பண் தலையில் சொன்ன - தலைமையாகிய பண்களில் அமைத்துச் சொன்ன

விளக்க உரை

பரந்து சிவந்திருந்துள்ள திருக்கண்களையும் அவற்றுக்குப் பரபாகமாகக் கறுத்த திருமேனியையுமுடைய எம்பெருமானைக் குறித்து, ஆழ்வார்பண்ணின் மேலே அருளிச்செய்தவாயிரத்துள் இப்பதிகத்தை ஓதவல்லவர்கள், திருநாட்டிலே வீற்றிருந்து நித்யானந்த மனுபவிக்கப் பெறுவார்களென்று, இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று.ச்

English Translation

This decad of the thousand songs by Valudian of bee-humming groves is for Krishna. Lord with lotus eyes. Those who can sing it will rule over Heaven and Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்