விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குமரி மணம் செய்து கொண்டு*  கோலம் செய்து இல்லத்து இருத்தி* 
    தமரும் பிறரும் அறியத்*  தாமோதரற்கு என்று சாற்றி* 
    அமரர் பதியுடைத் தேவி*  அரசாணியை வழிபட்டு* 
    துமிலம் எழப் பறை கொட்டித்*  தோரணம் நாட்டிடுங் கொல்லோ?* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குமரி மணம் செய்து கொண்டு - கன்னிகை யவஸ்தையிற் செய்யவேண்டிய மங்கள விசேஷத்தைச் செய்து;
கோலம் செய்து - (ஆடை ஆபரணங்களால்) அலங்கரித்து;
இல்லத்து - விவாஹமந்திரத்தில்;
இருத்தி - உட்காரவைத்து;
தமரும் - பந்துவர்க்கங்களும்;

விளக்க உரை

கண்ணபிரான், தன்மகளைக் கிறிசெய்து கொண்டுபோனமையை பற்றி சிந்தித்துப் பயனில்லையென்று அச்சிந்தையை விட்டிட்டு, புக்ககத்துத் தலைவர்கள், இவளுக்கு விவாஹாங்கமாகச் செய்யவேண்டிய தோழிப் புழுங்கல் முதலிய மங்கள காரியங்களை அடைவுபடச்செய்து சீர்மைகுன்றாமல் அலங்காரங்களையும் அமைத்து, மணமாளிகையில் ஸகல ஜனங்களையும் அழைத்து விதிப்படி “இவளைக் கண்ணனுக்குத் தேவியாகத் தருகிறோம்” என்று வெளிப்படையாகச் சொல்லி, பிறகு விவாஹகாலத்தில் சாதிக்கேற்ற ஆசார முறைமையின்படி அலங்கார பீடத்தின்மேல் நாட்டும் அரசங்கிளையை இவள் வலம் வரும்படி செய்வித்து, ***** ஊரெங்கும் அலங்கரித்து இவ்வகைகளால் கொண்டாட்டமுங் கோலாஹலமுமாக இருப்பார்களோ? அன்றி, கொண்டாட்டம் ஏதுக்கு? என்று உபேக்ஷித்திருப்பர்களோ? என்று ஸந்தேஹிக்கிறாள். “அரசாணியை வழிபட்டு” என்றது-மற்றுமுண்டான சாதித் தொழில்களுக்கெல்லாம் உபலக்ஷணமென்க.தேவி-****. துமிலம்-பேராரவாரம். தோரணம்-வடசொல்.

English Translation

Will they deck her, seat her in the hall, and make it known to relatives and friends that she weds Damodara? Then as Queen to the Lord of gods, after she goes round the sacred fig branch, to the tumultuous beat of drums and flutter of festoons everywhere, will they celebrate her marriage properly? O, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்