விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எங்கும் உளன் கண்ணன் என்ற*  மகனைக் காய்ந்து,* 
  இங்கு இல்லையால் என்று*  இரணியன் தூண் புடைப்ப,*
  அங்கு அப்பொழுதே*  அவன் வீயத் தோன்றிய,*  என் 
  சிங்கப் பிரான் பெருமை*  ஆராயும் சீர்மைத்தே? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணன் எங்கும் உள்ள என்ற - எம்பெருமான் எங்கு மிருக்கிறானென்று சொன்ன
மகனை - புத்திரனை (ப்தஹ்லாதனை)
இரணியன் - (பிதாவான) ஹிரண்யாசுரன்
காய்ந்து - கோபித்து
இங்கு இல்லை என்று - இவ்விடத்தில் இல்லை கிடாய் என்று

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “ஏண்பாலுஞ் சோரான் பரந்துளனாமெங்குமே” என்றதில் சிலர் சங்கை கொண்டார்களாக, அவர்களை நோக்கிக் கூறுகின்றார்-எம்பெருமானுடைய வ்யாபகத்வத்திலே விப்ரதிபத்தியுடையார் இரணியன்பட் பாடுபடுவார்கள்; ஆகையாலே கெடுவிகாள்! அவன் பட்டபாடு படாதே கிடிகோள்-என்கிறார். வேறேயொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால், முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளே வைத்து நாட்டிய தூண் அது என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு இடமில்லாதபடி, அந்த இரணியன் தானே தனது உயரம் பருமனுக்குப் பொருந்தப் பார்த்து அளந்து நாட்டிய அவன் வாசல் தூணிலிருந்தே திருமால் நரசிங்கமாய்த் தோன்றினானென்பதும், வேறு யாரேனும் கையால் தட்ட அத் தட்டியவிடத்திலிருந்து தோன்றினால் ‘அவர் தம் கையில் நரசிங்கத்தை அடக்கிக் கொண்டு வந்து தூணிலே பாய்ச்சினார்” என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு அவகாசமில்லாதபடி அவ்விரணியன் தானே தன் கையால் தட்டினவளவில் திருமால் தோன்றினானென்பதும்,-அவன் ஓரிடத்தில் தட்ட மற்றோரிடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் ‘எங்குமுளன்’ என்று ப்ரஹ்லாதன் செய்த பிரதிஜ்ஞை தவறி ‘நீ சொல்லுகிறவன் இங்கில்லை’ என்று இரணியன் செய்த பிரதிஜ்ஞை நிலை நிற்குமாகையாலே, அதற்கு இடமில்லாதபடி அவன், தட்டின இடத்திலிருந்தே திருமால் தோன்றினானென்பதும்,-அவன் தட்டினபிறகு சிறிதுபோது கழித்து நரசிங்கம் தோன்றினால் ‘நான் தட்டினபொழுது திருமால் அங்கில்லை’ என்று அவன் சொல்லி, திருமால் எங்கும் எப்பொழுதும் எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உண்மை.

English Translation

When the young lad said Krishna is everywhere, the Father swore, "Not here!" and smote a pillar. Then instantly my Lord appears, -what a wonder! –as a fierce man-lion and destroyed the king.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்