விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காண்பார் ஆர்? எம் ஈசன்*  கண்ணனை என்காணுமாறு,?* 
  ஊண் பேசில் எல்லா*  உலகும் ஓர் துற்று ஆற்றா,*
  சேணபாலவீடோ*  உயிரோ மற்று எப் பொருட்கும்,* 
  ஏண் பாலும் சோரான்*  பரந்து உளன் ஆம் எங்குமே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எம் ஈசன் - எமக்கு ஸ்வாமியான
கண்ணனை - ஸ்ரீக்ருஷ்ணனை
காண்பார்ஆர் - அறியவல்லார்யார்?
காணும் ஆறு என் - அறியும் விதந்தான் யாது? (அவனுக்கு)
ஊண்பேசில் - உணவு இன்னதென்று சொல்லப் புகுந்தால்

விளக்க உரை

எம்பெருமானது அறிபுதத் தொழில்கள் எப்படிப்பட்டவர்கட்கும் எல்லை காணமுடியா வென்கிறார். ஸர்வேச்வரனா யிருந்து வைத்துக் கண்ணனாய் வந்தவதாரித்து எனக்குக் கையாளானவனை, அவன் தானே காட்ட நான் கண்டாப் போலே காண்பார்க்குக் காணலாமேயல்லது, ஸ்வப்ரயத்நத்தாலே காணப்புகுவார்க்கு ஒரு நாளும் காணமுடியாதென்கிறது. “எம்மீசன் கண்ணனைக் காண்பாரார்” என்று சொல்லிவைத்து மீண்டும் “என் காணுமாறு” என்றதற்குக் கருத்து என்னென்னில் காணக் கூடியவல்லமை பெற்ற மஹான்கள் உண்டானாலும் அவர்கள் காணுமளவாக இல்லையே பகவத் விஷயத்தின் பெருமை என்றவாறு. “அளவுடையார் சிலர் காண விழிந்தார்களென்னை, விஷயத்தைப் பாரிச்சோரிக்கப் போகாதே” என்ற ஈடு காண்க. ஏன் பாரிச்சேதிக்கப் போகாதென்ன, அதற்கு நிருபகம் மேல் மூன்றடிகள் அவனுடைய ஊணாகிற ஒரு செயலைச் சொல்லப் பார்க்கில் ஸகல லோகங்களும் அவனுடைய ஒரு க்ராஸத்திற்குப் போராது. திருவரங்கக் கலம்பகத்தில் “அண்டாமெலா முண்டயென்ப ரறியாதால் ஆங்கவை நீ, உண்டருளுங் காலத்தில் ஒரு துற்றுக் காற்றாவால்” என்றது இப்பாசுரத்தையுட்கொண்டென்க. பின்னடிகட்குப் பொருள் கொள்ளுந் திறத்துப் பன்னீராயிரப்படியின் வழிவேறு, மற்ற படிகளின் வழி வேறு சேண்பால என்றதைக் குறிப்பு வினைமுற்றாகக் கொண்டார்வாதி கேஸாரி; வீட்டுக்கு அடைமொழியாகக் கொண்டனர் மற்றுமுள்ள ஆசிரியர்கள். மேலுள்ள பதங்களின் பொருளிலும் வாசியுண்டு. “உயர்த்யையே ஸ்வபாவமாக வுடைத்தான பரமபதமென்ன, முக்தாத்மஸ்வரூபமென்ன, மற்றுமுண்டான தேவாதிகளென்ன-ஆக எல்லாப் பதார்த்தங்களுக்கும் வ்யாபகன்” என்க. ‘ஏண்பாலும்’ என்றதை நீட்டல் விகாரமாகக்கொண்டு, எண்டிசையும் என்றரைத்தலு மொன்று

English Translation

Who can fathom my Krishna-lord, and by what means? He swallowed the Universe whole, all in one gulp. In all things and beings and in the eight quarters, he pervades all, even the high Heaven.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்