விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புலன் ஐந்து மேயும்*  பொறி ஐந்தும் நீங்கி,* 
    நலம் அந்தம் இல்லது ஓர்*  நாடு புகுவீர்,*
    அலமந்து வீய*  அசுரரைச் செற்றான்,* 
    பலம் முந்து சீரில்*  படிமின் ஒவாதே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புலன் ஐந்து - சப்தாதி விஷயங்கள் ஐந்திலும்
மேயும் - மேய்கின்ற
பொறி ஐந்தும் - பஞ்சேந்திரியங்களின்வசத்தில் நின்றும்
நீங்கி - விலகி
நலம் அந்தம் இல்லர் ஓர்நாடு புகுவீர் -  ஆனந்தம் அளவிறந்திருப்பதான திருநாட்டிலே போய்ப்புக வேண்டியிருப்பவர்களே!

விளக்க உரை

அற்பமான விஷய ஸூகங்களைவிட்டு, அற்புத இன்பமயமான மோக்ஷ புருஷார்த்தத்தைப் பெற்றுக் களிப்புறபேண்டி யிருப்பீர்! எம்பெருமானுடைய திருக்குணங்களிலே இடைவிடாது அவகாஹித்துப் போருங்கோள், என்கிறார். ஐந்து இந்திரியங்களும் ஐந்து விஷயாந்தரங்களிற் பட்டிமேய்வது இயல்பு. கண்ரூபங்களைக் காண்பதும், காது ஒலிகளைக் கேட்பதும், நாக்கு உணவுகளைச் சுவைப்பதும், மூக்கு மணங்களை மோந்து பார்த்தலும், உடல் உடல்களைத் தீண்டுதலும், ஆக இப்படிப்பட்ட காரியங்கள் இந்திரியங்களுக்கு ஏற்பட்டவை. இவை “ஜிஹ்வே! கீர்த்தய கேசவம் முராரிபும்” என்ற முகுந்தமர்லை ச்லோகத்திற் சொல்லியபடியே நிகழுமாயின் குறையொன்றுமில்லை; விபாரிதமாக நிகழ்வதே உலகவியற்கையாதலின், அந்த நிகழ்ச்சியை மறுக்கக் கூறுகின்றார் முதலடியில். நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்!- இவ்வுலகம் துன்பங்களுக்கு அந்தமில்லாமலிருக்கப் பெற்றிருப்பதுபோலே, அவ்வுலகம் இன்பங்களுக்கு அந்தமில்லாதிருக்கப் பெற்றது. துக்கங்கள் தொலைந்தொழிவதே மோக்ஷமென்று கூறுகின்ற பரம வைதிகர்களில் ஆழ்வார்தலைவராதலால் ‘நலமந்த மில்லதோர்நாடு’ என்கிறார். அதனைப் புக விரும்பியிருப்பவர்களே!- என்று விளித்து அவர்கட்குக்காரியம் விதிக்கிறார் பின்னடிகளில்.

English Translation

If you wish to go beyond the five sense and enter the world of endless good, learn to sing the glories of the Lord who destroys the Asuras by the score.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்