விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  புணர்க்கும் அயன் ஆம்*  அழிக்கும் அரன் ஆம்,* 
  புணர்த்த தன் உந்தியொடு*  ஆகத்து மன்னி,* 
  புணர்த்த திருஆகித்*  தன் மார்வில் தான்சேர்,* 
  புணர்ப்பன் பெரும் புணர்ப்பு*  எங்கும் புலனே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தன் புணர்த்த - தன்னைப் படைத்த
உந்தியோடு - திருநாபியோடேகூட
ஆகத்து - திருமேனியிலொரு பக்கத்திலும்
மன்னி - பொருந்தியிருந்து
புணாக்கும் - லோக ஸ்ருஷ்டியைப் பண்ணுகிற

விளக்க உரை

முதற்பாட்டில் “இருவரவர் முதலுந்தானே” என்றதை விவாரித்துக் கொண்டு, அப்பெருமானுடைய ஐச்வர்ய ஸூசகமான சேஷ்டிதங்கள் எங்கும் ப்ரஸித்தமர்கவேயுள்ளன வென்கிறார், “தன் புணர்த்தவுந்தியோடு ஆகத்துமன்னிப் புணாக்குமயனாம். அழிக்கும் அரனாம்” என்று முன்னடிகளை அந்வயித்துக் கொள்க பிரமன் எம்பெருமானது திருநாபியில் தோன்றினது மாத்திரமேயல்லாமல், “சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர்திருவாகம்” என்றும், “ஏறாளுமிறையோனும் திசைமுகனுந் திருமகளும், கூறாளுந் தனிவுடம்பன்” என்றுஞ் சொல்லுகிறபடியே திருமேனியோடுங் கூறுடையனானது பற்றித் “தன் புணர்த்தவுந்தியோடு ஆகத்து மன்னி” எனப்பட்டது. ஸ்ருஷ்டி கர்த்தாவாக ப்ரஸித்தனான பிரமனுக்கும், ஸம்ஹார கர்த்தாவாக ப்ரஸித்தனான ருத்ரனுக்கும், தானே அந்தர்யாமியாயிருந்துகொண்டு, அவ்வக்காரியங்களை நடத்திப் போருமவனென்றபடி. (தன் மார்வில் புணர்த்த திருவாகித் தான்சேர் புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலன்) லட்ஷ்மீபதித்வமும் ஐச்வர்ய லக்ஷணமாகையாலே, அது மூன்றாமடியில் சொல்லிற்று. தான்சேர் புணர்ப்பன் என்றதற்கு இருவகைப்பொருள் கூறுவர்; ஸ்ருஷ்டிக்காக ஏகார்ணவத்திலே சாய்ந்தருளினவன் என்றும், தனக்குத் தகுதியான சேஷ்டிதங்களை யுடையவன் என்றும். புணரி என்று கடலுக்குப் பேருண்டாதலால் புணர்ப்பு என்பதையும் கடலுக்குப் பேராகக்கொண்டு முதற்பொருள் கூறியிருக்கலாமென்று, சில பெரியோர் கருதுவர். பெரும் புணர்ப்பு எங்கும் புலனே-பிரமன் முதலானார்க்கு இட்ட காரியங்களை அவர்கள் வழியாலே தானே நடத்தியும், தன் தலையில் வைத்துக்கொண்ட காரியங்களையும் தானே நடத்தியும் போருகையாலே அவனுடைய ஆனைத் தொழில்கள் எங்கும் காணலாயிருக்குமென்க.

English Translation

From the lotus that grew on his navel arose Brahma the creator. then Siva the destroyer, with Lakshmi gracefully sitting on his chest. He lies in the cosmic Milk-Ocean.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்