விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நீந்தும் துயர்ப் பிறவி*  உட்பட மற்று எவ் எவையும்,* 
  நீந்தும் துயர் இல்லா*  வீடு முதல் ஆம்,*
  பூந் தண் புனல் பொய்கை*  யானை இடர் கடிந்த,* 
  பூந் தண் துழாய்*  என் தனி நாயகன் புணர்ப்பே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பூ தண் புனல் பொய்கை - அழகிய குளிர்ந்த நீரையுடைய தடாகத்தில்
யானை - கஜேந்திராழ்வானுடைய
இடர் - ஆர்த்தியை
கடிந்த - தொலைத்தருளினவனும்
பூ தண் துழாய் - துழாய் மாலையை யுடைவனுமான

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் ‘வீடுமுதலாம்’ என்றதை விவாரிக்கிறதா யிருக்கின்றது இப்பாசுரம். எம்பெருமான் வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை, அவனோடுண்டான ஸம்பந்தமே போரும் மோக்ஷமளிப்பதற்கு-என்கிறார். “நீந்துந் துயர்ப்பிறவியுட்பட மற்றெவ்வெவையும் நீந்தும்” என்னுமளவும் ஒரு வாக்கியமாக்கி “துயாரில்லா வீடுமுதலாம்” என்று மற்றொரு வாக்கியமாக்கியுரைப்பதும், அன்றியே, இரண்டடிகளுஞ் சேர்ந்து ஒரே வாக்கியமாக்கி ‘நீந்துந் துயர்ப் பிறவியுபட்ட மற்றெவ்வெவையும் நீந்துந் துயாரில்லா’ என்னுமளவும் வீட்டுக்கு விசேஷணமாக்கி யுரைப்பதும், ஆக இருவழிகளுமுண்டு. முதல் யோஜநையில்- நீந்துந் துயர்பிறவி யுட்பட மற்றெவ்வெவையும் நீந்தும்- போக்கிக்கொள்ள முடியாத துக்கத்தை விளைக்கின்ற பிறப்பு முதலான ஜராமரணாதிகயெல்லாவற்றையும் (பகவத் ஸம்பந்தம்) போக்கடிக்கும் துயர் இல்லா வீடுமுதல் ஆம்- துக்க லேசமுமில்லாத முக்தியையும் அளிக்கும் என்றபடி. இரண்டாவது யோஜநையில்-அபாரமான துயரங்களை விளைப்பதான பிறவி முதலாக மற்றும் அபாரமான ஜராமரணாதிகளான எவ்வகைப்பட்ட துக்கமும் ஸ்பர்சியாத மோட்ஷாநந்தத்திற்கு ஹேதுவாம் என்றபடி.

English Translation

My Lord who wears cool Tulasi flowers, is the saviour of the elephant in distress! Blending with him alone is liberation, from birth and all other miseries

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்