விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத*  உருவறைக் கோபாலர் தங்கள்* 
    கன்று கால் மாறுமா போலே*  கன்னி இருந்தாளைக் கொண்டு* 
    நன்றும் கிறி செய்து போனான்*  நாராயணன் செய்த தீமை*
    என்றும் எமர்கள் குடிக்கு*  ஓர் ஏச்சுக்கொல்? ஆயிடுங் கொல்லோ?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத - பொருந்திய ஞானம் சிறிதுமில்லாதவர்களும்
உரு அறை - ரூபஹீநர்களுமான
கோபாலர் தங்கள் - இடையரானவர்கள்
கன்று கால் மாறும் ஆ போலே - கண்ணுக்கழகிய கன்றுகளை உடையவர்களறியாமல் களவிலே கொண்டு போவது போல,
கன்னி இருந்தாளை - கன்னிகைப் பருவத்தளாய் எனக்கடங்கியிருந்த பெண்ணை

விளக்க உரை

ஆந்த்ர குணம் பாஹ்ய குணம் என்பவற்றில் ஒருவகைக் குணமுமற்ற இடையர், பிறர் தோழத்தில் கட்டி வைத்துள்ள கன்றுகளைத் திருடிக்கொண்டு போவது போலக் கன்ணபிரான் என்மகளைத் திருடிக்கொண்டு போயினன்; இவ்வாறான அவனது தீமையானது எங்கள் குலத்துக்குச் சாச்வதமான அவத்யத்தை விளக்குங்கொல்? என்றுசங்கித்துச் சொல்லுகிறபடி. ஒன்றுமறிவு=ஒன்றுதல் –பொருந்துதல். கோபாலர் தாங்கள் என்பது-தங்கள் எனக் குறைந்து கிடக்கிறது. கன்றுகால் மாறுதலாவது:- தீயவையாயுள்ள தங்கள் கன்றுகளை “உங்களுடையவை” என்று பிறர்க்குக் காட்டி, நல்லவையாயுள்ள அவர்கள் கன்றுகளைத் தன்களுடையன வாக்கிக்கொள்ளுதலும், பிறருடைய அழகிய கன்றுகளை உடையவர்களறியாமல் களவு வழியால் நிலைபேர்த்துக் கொண்டுபோதலுமாம்; பிற்பட்ட பொருளே இவ்விடத்துக்குச் சேருமெனக் கொள்ளப்பட்டது. இங்கு, நன்றுங்கிறி செய்கையாவது-பகலிற் கொண்டுபோனால் பலரறிந்து நிஷேதிக்கக் கூடுமென்று, அனைவரு முறங்கும்போது பார்த்துக் கொண்டு போதல். இப்படி இவன் செய்த தீமையானது குற்றமற்ற எங்கள் குடிக்கு ஸ்தாவரமான பழிப்பாகுமோ? அன்றி, என்பெருமான்றானே வந்து கைக்கொண்டு பொயினனென்று இக்குடிக்கு ஏற்றமாமோ? என்பது நான்காமடியின் கருத்தாதலால் ஸம்சா லக்ஷணம் அமையுமென்க.

English Translation

Even as utterly unintelligent artless cowherds deftly walk away with others’ calves, the Lord Narayana took away my maiden daughter, through well-planned treachery. Will this prove to be lasting blemish on our family? O Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்