விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வண்ண மா மணிச் சோதியை*  அமரர் தலைமகனை,* 
  கண்ணனை நெடுமாலைத்*  தென் குருகூர்ச் சடகோபன்,*
  பண்ணிய தமிழ் மாலை*  ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்,* 
  பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு*  அண்ணல் தாள் அணைவிக்குமே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வண்ணம் மாமணி சோதியை - நல்ல நிறமுடைய நீலமணியின் ஒளியை யுடையனாய்
கண்ணனை - ஸ்ரீக்ருஷ்ணனாகத் திருவவதாரித்தவனாய்
நெடு மாலை - (ஆச்ரிதர் பக்கலில்) அளவு கடந்து செல்லுகின்ற வியாமோஹத்தை யுடையவனான எம்பெருமானைக் குறித்து
தென் குருகூர்சடகோபன் - ஆழ்வார்
அமரர் தலை மகனை - நித்யஸூரி நிர்வாஹகனாய்

விளக்க உரை

இத்திருவாய்மொழி வல்லார் எம்பெருமானைப் பெறுவர்ரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். அழகிய நீலமணி நிறத்தனாய், இவ்வழகு நித்யஸூரிகளுக்கும் எல்லை காண வொண்ணாதபடி பெரியவனாய், அடியார்களைத் தானே அநுபவிக்குமவனாய், அதற்கு அடியான அபாரவ்யாமோஹத்தை யுடையனான எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்தினுள், பண்ணிலே புணாக்கப்பட்டதாய் த்வாதச நாமங்களைப்பற்றி வருகிற பாட்டான இவை பன்னிரண்டும், எம்பெருமான் திருவடிகளோடு சேர்த்துவிடும். இத்திருவாய்மொழியோடுண்டான ஸம்பந்தந்தானே கேசவன் தமராக்கிவிடும் என்றாவாறு.

English Translation

This bouquet of songs bearing the twelve names of the Lord, from the thousand songs by kurugur Satakopan is for Krishna, gem-hued Lord of celestials. those who can sing it will attain the Lord's feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்