விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இருடீகேசன் எம் பிரான்*  இலங்கை அரக்கர் குலம்,* 
  முருடு தீர்த்த பிரான் எம்மான்*  அமரர் பெம்மான் என்று என்று,*
  தெருடியாகில் நெஞ்சே வணங்கு*  திண்ணம் அறி அறிந்து,* 
  மருடியேலும் விடேல் கண்டாய்*  நம்பி பற்பநாபனையே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சே - மனமே!
தெருடி ஆகில் - நீ அறிவுடையை யாகில்
இருடீகேசன் என்று - ஹ்ருஷீகேசனே யென்றும்
எம்பிரான் என்று - எம்பிரானே யென்றும்
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த - இலங்கையிலிருந்த ராக்ஷ குலத்திற்கு முருடான ராவணனைத்

விளக்க உரை

இங்ஙனம் மஹோபகாரகனான எம்பெருமானை ஒருநாளும் விடலாகாதென்று நெஞ்சுக்கு உரைக்கும் முகத்தால். தம்முடைய அத்யவஸாயத்தை வெளியிடுகிறார்.-இராவணன் பத்துதலையையுடையனாய்க் கடல்சூழ்ந்த இலங்காபுரியிலே அரசனாய் வஸித்து வந்ததுபோல, ஐந்து ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்து கர்மேந்திரியங்களாகிற பத்துந்தலைகளை யுடைத்தாகி ஸம்ஸாரக்கடல் சூழ்ந்த சரீரரபுரத்திலே ஸ்வாந்த்ர ப்ரபுவாய் இருக்கின்றது மனம் அப்படிப்பட்ட மனத்தைத் திருத்தினதும் ராவணஸம்ஹாரம் செய்ததும், இரண்டு மொக்குமென்கிற கருத்தை ஒன்றரையடிகளாற் காட்டுகின்றார். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;-“இவருடைய இந்திரியவச்யதையை தவிர்த்தது-லங்கையில் ராக்ஷஸ ஜாதியில் விபீஷணாதிகளை வைத்து, முரடரான ராவணாதிகளை நிரஸித்தாப்போலே யாயிற்று.” என்பதாம். எம்மான் அமரர் பெம்மான்-இந்திரியங்களினுடைய இதரவிஷயப்ராவண்யத்தைத் தவிர்த்த மாத்திரமேயல்லாமல், நித்யஸூரிகளுக்குத் தன்னையநுபிவக்கக் கொடுக்குமாபோலே எனக்குத் தன்னையநுபவிக்கத் தந்தருளினவன், என்று கருத்து.

English Translation

Have good sense, O Heart! Learn and worship him well, chant Hishikesa, "My Lord who burnt the demon's Lanka, "O My Lord and Master, Lord of celestials, Padmanabha" and such. Not even through oversight must you stop chanting.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்