விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன்*  என்று என்று இராப்பகல் வாய் 
    வெரீஇ,*  அலமந்து கண்கள் நீர் மல்கி*  வெவ்வுயிர்த்து உயிர்த்து,*
    மரீஇய தீவினை மாள இன்பம் வளர*  வைகல் வைகல் 
    இரீஇ*  உன்னை என்னுள் வைத்தனை*  என் இருடீகேசனே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் இரு டீ கேசனே - அம்பெருமானான ஹ் ரு ஷீ கேசனே!
சிரி இதான் என்று - ஸ்ரீதரனே! என்றும்
செய்ய தாமரை கண்ணன் என்று - செந்தாமரைக் கண்ணனே! என்றும்
இரா பகல் - இரவும் பகலும்
வாய் வொரி இ - வாய் பிதற்றி

விளக்க உரை

கீழ் ஆடியாடி யென்கிற நான்காந் திருவாய்மொழியில் நான்பட்ட துயரமெல்லாம் தொலைந்து மகிழ்ந்தேனாம்படி என்னுள்ளே வந்து பேராதபடி புகுந்தருளி என்னுடைய இந்திரியங்களை அடக்கி ஆண்டனையே! என்று உகக்கிறார். இப்பாசுரத்தைப் பூருவர்கள் நிர்வஹிக்கிறபடி ஒருவகை; பட்டர் நிர்வஹிப்பது ஒரு வகை. மூன்றாமடியில் “மாரிஇய தீவினைமாள” என்றிருப்பதை முன்னிரண்டடிகளோடு ஸம்பந்தப்பட்டதாகக் கொள்ளாமல் உரைத்தார்களாம் பூருவர்கள்; அதாவது-என்னிடத்தில் மருவியிருந்த தீவினைகளெல்லாம் மாளும்படி நீ அநுக்ரஹம் செய்ததனாலே, சிரிதரன் செய்யதாமரைக் கண்ணன் என்றென்று இரவும் பகலும் வாய்வெருவிக்கொண்டு கண்ணீர்சொரிவதும் பெருமூச்சுவிடுவதுமா யிருந்து கொண்டு, இப்படிப்பட்ட பக்திப்பேரின்பம் க்ஷணந்தோறும் வளர்ந்து செல்லும்படியாக உன்னை யென்னுள் வைத்தனை, என்பதாக முன்னோர்கள் நிர்வஹிக்கும்படி. இதனால் முன்னிரண்டடிகளிற் கூறப்பட்டுள்ள விஷயம் ஆழ்வார்க்கு இந்தப்பாசுரம் பேசும் ஸமயத்திலிருப்பதாக நிர்வஹிக்கின்றமை விளங்கும். வாய் வெருவுவதும் அலமருவதும் கண்ணீர்மல்கப் பெறுவதும் வெவ்வுயிர்க் கொள்வதுமாகிய இவை இன்பமாகக் கூடுமோவெனில், ஆழ்வார்பக்தி பரவசராகையாலே இந்த நிலைமை இவர்க்குக் தேஹயாத்ரா சேஷமாய் நித்தியமாக இருக்கக்கூடியதாகையாலே இவை இன்பமாகக் குறையில்லை யென்பதும், பூருவர்களின் திருவுள்ளம். ஆக, முன்னடிகளிற் கூறப்பட்ட விஷயம் ‘திவினைமாள்’ என்பதிலேயல்லாமல் இன்பம் வளர வென்பதிலே அந்வயிப்பதாகப் பூருவர்கள் நிர்வஹித்தாத்களென்றதாயிற்று.

English Translation

I chanted 'Sridhara', 'My lotus-eyed Lord" and many other names night and day, prating madly, depressed, with tears in my eyes and breathing holly, You rid me of my store of karmas, and gave me yourself. Then you planted yourself in my heart for all times. My Hrishikesava!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்