விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாமனன் என் மரகத வண்ணன்*  தாமரைக் கண்ணினன்- 
  காமனைப் பயந்தாய்,*  என்று என்று உன் கழல்*  பாடியே பணிந்து,*
  தூ மனத்தனனாய்ப்*  பிறவித் துழதி நீங்க,*  என்னைத் 
  தீ மனம் கெடுத்தாய்*  உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என் சிரிதானே - எனது திருமாலே!
வாமனன் என்று - வாமன மூர்த்தியே யென்று சொல்லியும்
என் மரதகம் வண்ணன் என்று - மரதகம் போன்ற வொளியையுடைய எம்பெருமானேயென்று சொல்லியும்
தாமரைக் கண்னினன் என்று- புண்டாரிகாக்ஷனே யென்று சொல்லியும்

விளக்க உரை

தம் விஷயத்தில் எம்பெருமான் பண்ணிந மஹோபகாரத்திற்கு இன்னது கைம்மாறு செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றமையைத் தெரிவிக்கும் பாசுரமிது, அவன் செய்த உபகாரம் யாதெனில், தன்னை யநுபவிப்பதற்கு உறுப்பாகாமலிருந்த நெஞ்கை மாற்றிப் பதஞ்செய்வித்த விதுவே மஹோபகார மென்கிறார். முன்பெல்லாம் திருநாமஞ் சொல்லுவதென்றால் வேப்பங்கஷாயம் குடிப்பது போல் வெறுத்துக்கிடந்த நான், இப்போது ஒரு நொடிப்பொழுதும் இடை வீடின்றி, வாமனனே! என் மரதகவண்ணனே! புண்டாரிகாக்ஷனே! காமன் தன் தந்தையே! என்றிப்படிப் பலபல திருநாமங்களையே சொல்லி உன் திருவடிகளைப்பாடியே பணிந்து, ப்ரயோஜநாந்தரங்களை விரும்பாத சுத்தமர்ன ஹ்ருதயத்தையுடையேனாய், இனியொருநாளும் ஸம்ஸாரபந்தம் நேராதபடியாகப் பழைய தீயமனம் கெட்டுப்போம்படி பண்ணியருளினாயே!. இங்ஙனே பண்ணின வுபகாரத்தின் கனத்தைப் பார்த்தாலோ ஏதேனுமொரு கைம்மாறு செய்தல்லது தாரிக்க மாட்டுகின்றிலேன்; என்ன கைம்மாறு செய்வதென்று மறிகிலேன்; திருமகள் கொழுநனாய் அவாப்த ஸம்ஸ்தகாமனாயிருக்கின்ற வுனக்கு, சூத்ரனான நான் செய்யத்தக்க தொன்றுமில்லையே! என்றாராயிற்று.

English Translation

Singing, 'Vamana', 'O My gem-hued Lord of lotus eyes, O Father of Kama" and many such names I worshipped you. You made my heart pure, and rid me of my birth pains. O My Sridhara, what can I do for you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்