விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விட்டு இலங்கு செஞ்சோதித்*  தாமரை பாதம் கைகள் கண்கள,* 
    விட்டு இலங்கு கருஞ்சுடர்*  மலையே திரு உடம்பு,*
    விட்டு இலங்கு மதியம் சீர்*  சங்கு சக்கரம் பரிதி,* 
    விட்டு இலங்கு முடி அம்மான்*  மதுசூதனன் தனக்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விட்டு இலங்கு முடி அம்மான் - நன்றாக விளங்குகின்ற திருவபிஷேகத்தையுடைய ஸ்வாமியான
மதுசூதனன் தனக்கு - மதுவைக்கொன்ற பெருமானுக்கு
பாதம் கைகள் கண்கள் - திருவடிகளும் திருக்கைகளும் திருக்கண்களும்
விட்டு இலங்கு செம் சோதி தாமரை - விரிந்து விளங்குகின்ற சிவந்த சுடரையுடைய தாமரைப்பூக்களேயாம்
திருஉடம்பு - திருமேனியோ வென்றால்.

விளக்க உரை

தம்மையும் தம்முடைய ஸம்பந்த ஸம்பந்திகளையும் எம்பெருமான் வைஷ்ணவராக்கினது, வடிவத்தைக் காட்டியென்கிறார். திருமாலையாண்டான் பக்கலிலே எம்பெருமானார்திருவாய்மொழி கேட்டருளுங் காலத்தில், பாசுரந்தோறும் அம்பெருமானார்விலக்ஷணமாக ஒவ்வொரு அர்த்த விசேஷம் தாம் சொல்லி ‘இப்படியிருக்கலாமோ?’ என்பாராம் ஆண்டான் அதுகேட்டு ‘இது விச்வாமித்ர ஸ்ருஷ்டியாயிருக்கிறது; ஆளவந்தாரருளிச்செய்ய நான் கேட்டதில்லை’ என்று ஸாதிப்பாராம். இப்பாசுரம் வருகையில், எம்பெருமானார் ஒன்றும் ஸாதியாமல் இருக்கக் கண்ட ஆண்டான், ‘இப்பாட்டில் விச்வாமித்ர ஸ்ருஷ்டி ஒன்றுமில்லை போலும்!’ என்று புன்முறுவலோடே கேட்டுவிட்டாராம். எம்பெருமான் தன்னுடைய திருமேனியழகைக் காட்டி ஆழ்வாரைத் தனக்காக்கிக் கொண்டமையை இப்பாட்டில் சொல்லுவதாக ஆளவந்தாரருளிச் செய்தபடி. உடையவரும் இப்படியே அருளிச் செய்துவந்தார்; பட்டர் அருளிச் செய்யும்போது ‘ஆழ்வாரையும் ஆழ்வாடைய ஸம்பந்திகளையும் விஷயீகாரித்து அத்தாலே எம்பெருமானது திருமேனியிற் பிறந்த புகரைச் சொல்லுகிறது’ என்பராம். எம்பெருமானுடைய வடிவழகைக் காரண கோடியிலே நிறுத்தி ஆளவந்தாருடைய நிர்வாஹம். அதைக் கார்ய கோடியிலே நிறுத்திப ட்டருடைய நிர்வாஹமென்று வாசிகாண்க.

English Translation

My Lord 'Vishnu' wears a radiant crown. My Madhu-foe has red lotus feet, radiant hands and eyes. His frame is dark and radiant like a beautiful mountain. His conch and discus bear the radiance of the Moon and Sun"

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்