விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோவிந்தன் குடக் கூத்தன்*  கோவலன் என்று என்றே குனித்துத்* 
    தேவும் தன்னையும்*  பாடி ஆடத் திருத்தி*  என்னைக் கொண்டு என்
    பாவம் தன்னையும்*  பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்,* 
    மேவும் தன்மையம் ஆக்கினான்*  வல்லன் எம்பிரான் விட்டுவே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வல்லன் - ஸர்வகக்தனும்
எம்பிரான் - எமக்கு உபகாரங்கள் செய்பவனுமான
விட்டு - விஷ்ணுபகவான் (எமக்குச் செய்ததுயாதெனில்)
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து - கோவிந்தன் என்றும் குடக் கூத்தாடுபவன்; என்றும் கோவாலன் என்றும் இத்தகைய திருநாமங்களையே சொல்லிக் கூத்தாடி
தேவும் - பரத்வத்தையும்

விளக்க உரை

என்னை மாத்திமன்றியே என்னோடு ஸம்பந்த ஸம்பந்த முடையாரையுங்கூட என்னைப்போலே யாக்கின எம்பெருமானுடைய ஸாமாத்தியம் என்னே! என்று வியந்து பேசும் பாசுரமிது. ஸௌலப்ய குணத்திற்கு ஏகாந்தமர்ன திருநாமங்களை இடைவிடாது சொல்லி உவகை தலைமண்டை கொண்டு கூத்தாடி, அந்த ஸௌலப்யத்திற்கு அடிமையான பரத்வத்தையும் தனக்கு அஸாதாரண ஸ்வபாவமான நீர்மையையும் பாடித் திரியும்படி, இரும்பைப் பொன்னாக்குவாரைப்போலே என்னை நித்யஸூரியென்னலாம்படி திருத்தித் தன்னுடையவனாகக் கைக்கொண்டு, தன்னுடைய அங்கீகாரத்திற்கு விரோதியாயிருந்த என்னுடைய பாபங்களையும் ஓடிப்போம் படி துரத்தி, என்னோடு ஸம்பந்தமுள்ளவர்கள் ஏழேழு ஜன்மமும் தன்னை ப்ராபிக்குந் தன்மையையுடையோமாம்படி! இப்படியும் ஒரு வல்லமை யுண்டாவதே! என்றாராயிற்று. வல்லனெம்பிரானென்பதை முடிவிலேயே அந்வயிக்கவுமாம்.

English Translation

For dancing, singing 'Govinda' Gopala and many such names, he made me pure and took me into his service. My clever Lord Vishnu rid me of my past misdeeds. Then he made me love him now and through seven lives.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்