விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நல்லது ஓர் தாமரைப் பொய்கை*  நாண்மலர் மேல் பனி சோர* 
  அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு*  அழகழிந்தால் ஒத்ததாலோ* 
  இல்லம் வெறியோடிற்றாலோ*  என்மகளை எங்கும் காணேன்* 
  மல்லரை அட்டவன் பின்போய்*  மதுரைப் புறம் புக்காள் கொல்லோ?* (2) 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நல்லது ஓர் தாமரைப் பொய்கை - அழகிய ஒரு தாமரைக் குளமானது (தன்னிடத்துள்ள);
நாள் மலர் மேல் - அப்போதலர்ந்த பூவின்மேல்;
பனி சோர - பனி பெய்ததனால்;
அல்லியும் தாதும் - (அம்மலரினது) உள்ளிதழும் புறவிதழும் உதிரப்பெற்று;
அழகு அழிந்தால் ஒத்தது - அழகு அழியப் பெறுவது போல;

விளக்க உரை

ஆல், ஓ-இரக்கக் குறிப்பிடைச் சொற்கள். என் பெண்பிள்ளையாலே விடப்பட்ட இவ்வீடு, பனிபெய்த்தனால் தாமரைப்பூக்களிலுள்ள இதழ்கள் உதிரப்பெற்று அதனால் அத்தாமரைப் பொய்கை அழகழிந்து தோற்றுவதுபோலுள்ளது; இவள் போனவிடம் இன்னதென்று தெரியவில்லை: ஒருகால் கண்ணபிரானோடுகூடித் திருவாய்ப்பாடிக்குச் சென்றிருப்பாளோ? என்று திருத்தாயார் தன்னிலே தான் ஐயமுற்றுச் சொல்லுகிறபடி. இத்திருமாளிகையில் பெண்பிள்ளையிருந்தது ஓரடி நிலத்திலாகிலும் அகம் முழுவதும் அவளேயிருந்ததாகத் தாய்க்குத்தோற்றிக் கிடந்தபடியால் இல்லம் வெறியோடிற்றாலோ என்கிறாள். மதுரைப்புறம்:- மதுரைப் புரம் அன்று புறம்—ப்ராந்தம் எனவே, திருவாய்ப்பாடியாயிற்று. ஸம்சயங்களெல்லாம் (“குற்றியோமகனோ?” என்றாற்போல) இரண்டு கோடிகளைப் பற்றிப் பிறக்குமாதலால் இங்கு, கம்ஸனிருப்பிடமான மதுரையிற் புகுந்தாளோ? அன்றி, அதனருகிலுள்ள திருவாய்ப்பாடியிற் புகுந்தாளோ? என்று ஐயமுற்றதாக்க் கொள்க ஒருவருக்கொருவர் பண்ணுகிற சிருங்கார சேஷ்டைகளினால் இருவரும் மயங்கி மெய்மறந்து கம்ஸ நகரத்தில் புகுந்தார்களாகில் தீராத்துன்பம் விளையுமே என்ற அதிசங்கை தாய் நெஞ்சினுள் நடமாடுகின்றதென்றுணர்க.

English Translation

Just like when frost descents on a lake, the fresh lotuses lose their petals and sepals leaving the lake bereft of charm, my house is desolate, for I cannot find my daughter anywhere. She went after the wrestler’s killer Krishna. Would she have entered the outskirts of Madura? O Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்