விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நாரணன் முழு ஏழ் உலகுக்கும்*  நாதன் வேத மயன்,* 
  காரணம் கிரிசை கருமம் இவை*  முதல்வன் எந்தை,*
  சீர் அணங்கு அமரர் பிறர் பலரும்*  தொழுது ஏத்த நின்று,* 
  வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான்*  என் மாதவனே.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நாரணன் - நாராயணனும்
முழு எழ் உலகுக்கும்நாதன் - எல்லா உலகங்களுக்கும் ஸ்வாமியும்
காரணம் கிரிசை கரமம் இவை முதல்வன் - காரணப் பொருள்கள் காரியப் பொருள்கள் பிரயோஜனங்கள் ஆகிய இவற்றுக்கு நிர்வாஹகனும்
சீர்அணங்கு அமரர் - சீர்மை பொருந்திய திவ்யர்களான ந்த்யஸூரிகளாலும்
பிறர் பலரும் - மற்றும் பலபேர்களாலும்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், நாராயணன் என்கிற திருநாமம் ப்ரஸ்துதாமகவே அதனுடைய அர்த்தாநுபவம் பண்ணுவதாக இப்பாசுரம் அமைகின்றது. இங்குத் தொடக்கத்தில் நாரணன் என்று திருநாமத்தைச்சொல்லி, அதற்குமேல் அர்த்ததைச் சொல்லுகிறார். முழுவேலுலகுக்கும் நாதன் என்றது, நாராயண நாமத்தின் திரண்ட பொருள் சொன்னபடி. நார சப்தத்தாலே உலகத்திலுள்ள ஸகல சேதநா சேதநப் பொருள்களும் சொல்லப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் (அயநம்) தான் இருப்பிடமாகவுள்ளவன் என்று, ஸர்வஸ்மாத் பரத்வஞ் சொன்னபடி. இப்படிப்பட்ட நாராயணன் ஒருவனுளன் என்பதில் பிரமாணம் எதென்ன, வேதமயன் என்கிறது பலபல வேதவாக்யங்களினால், ஸர்வஸ்வாமியாக ஓதப்படுகிறவனென்க காரணம் கிரிசை கருமமிவை முதல்வனெந்தை- எல்லாப் பொருள்களும் தானேயாயிருக்கின்றனென்று ஒதுகின்ற உபிநஷத்துக்களின் கருத்து இதுதான் என்று காட்டுகிறபடி. காரணம் என்பதனால், உலகில் ஒன்றுக்குக் காரணமாகத் தென்படுகின்ற பொருள்கள் யாவும் கொள்ளத்தகும். கிரிசை என்பதனால், அக்காரணப் பொருள்களினால் படைக்கப்படுகின்ற காரியப் பொருள்கள் யாவும் கொள்ளத்தகும். கருமம் என்பதனால், என்ன காரியத்திற்காக இப்பொருள் ஏற்பட்டதென்று விசரீரக்குமளவில், கூறப்படுகின்ற பலன் கொள்ளத்தகும். ‘பானை என்ன காரியத்திற்காக?’ என்று கேட்டால் ‘தண்ணீர் கொண்டுவருவதற்காக’ என்று சொல்லுவோமன்றோ; அதுவே இங்குக் கருமம் என்பதனால் விவக்ஷதம். ஆக, இவை எல்லாம் ஈச்வரனிட்ட வழக்கு என்றவாறு. கிரிசை கருமம் என்பதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம் ஒரு காரணப் பொருளிலிருந்து ஒரு காரியப்பொருள் பிறப்பதற்கு ஹேதுவாக இடையில் செய்யப்படுகின்ற காரியம் எதுவோ அது கிரிசை என்றும் அதனால் பிறக்கும் காரியப் பொருள் கரும மென்றும் கொள்க. நாராயணத் திருநாமத்திற்கு இரண்டு வகையாக வ்யுத்பத்தி உண்டு நாரங்களுக்கு அயநம் என்பது ஒன்று; நாரங்களை அயநமாக உடையவன் அன்பது மற்றொன்று. இவ்விருவகை வ்யுத்பத்திகளாலும், பலத்வமும் ஸெயலப்யமும் பலிக்குமென்று, முமுக்ஷப்படி முதலியவற்றில் ஆசரீரயர்கள் நிரூபித்தருளினார்கள். இங்கு ஆழ்வார்ஸௌலப்யம் பலிக்கக் கடவதான யோஐநையை திருவுள்ளத்திற்கொண்டு க்ருக்ஷணாவதாரத்தை நினைத்து, அதில் செய்தவொரு செயலை பின்னடிகளிற் பேசுகின்றார். அவதாரங்களும் அவதார சேஷ்டிதங்களுமெல்லாம் நாராயண நாமத்தின் பொருளே யாகுமன்றோ. ‘சீரணங்கு’ என்பதை அமராக்கு விசேஷணமாகக் கொள்ளாமல் தனிப்பட்ட விசேஷ்யமாகக் கொள்வதுமுண்டு. தெய்வமகளான பிராட்டியைச் சொன்னபடி, பிராட்டியும், அமரரும், பிறர் பலரும் தொழுதேத்த நின்று என்றபடி. “சூருமணங்கும் தெய்வப் பெண்ணே” என்பது நிகண்டு, அணங்கு என்ற விது அமராக்கு விசேஷணமாமிடத்து ‘தெய்வத்தன்மை வாய்ந்த’ என்று பொருள்படும்.

English Translation

'Narayana' is the master of all the worlds, extolled by the Vedas, He is the cause, effect and the act of all, my master, He is worshipped by Lakshmi and all the celestials. He is Madhava my Lord, who broke the tusk of the elephant.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்