விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கேசவன் தமர்*  கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்,* 
    மா சதிர் இது பெற்று*  நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா,*
    ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்*  விண்ணோர் 
    நாயகன்,*  எம் பிரான் எம்மான்*  நாராயணனாலே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஈசன் - எல்லார்க்கும் ஸ்வாமியாய்
என் - என்னுடைய அனுபவத்திற்கு உரிய
கரு செம்கோலம் கண்ணன் - சிவந்து அழகிய திருக்கண்களை நான் அநுபவிக்கும்படி
செய்தவனாய்
விண்ணோர்நாயகன் - நித்யஸூரிநாதனாய்
எம்பிரான் - எனக்கு உபகாரகனாய்

விளக்க உரை

பின்னடிகளை முத்துற அந்வயித்துக்கொண்டு முன்னடிகளைப் பிறகு அந்வயித்துக் கொள்க. ஸர்வேச்வரனாய், அழகு நிறைந்த திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டனாய், நித்யஸூரி நாதனாய் எனக்கு ஸ்வாமியாயிருக்கின்ற நாராயணனாலே, என்னோடு ஏதேனுமொருபடி ஸம்பந்தமுடையாரெல்லாரும், கேசவன்தமர் என்னும் படியான சிறப்புப் பெற்றார்கள்; அதனாலே நம்முடைய ஸ்ரீவைஷ்ணவஸ்ரீவிலக்ஷணமாகவுள்ளது என்கிறார். தமர்-அடியார்கள் என்றபடி; கேசவன் என்ற திருநாமத்திற்கு மூன்று வகையாகப் பொருள் கூறுவர்; 1.சிறந்த மயிர்முடியை உடையவன், 2.கேசியென்னும் அசுரனை (ஸ்ரீக்ருஷணவதாரத்தில்) வதஞ் செய்தவன், 3.பிரமனுக்கும் சிவபிரானுக்கும் நியாமகன்-என்பன மூன்று அர்த்தங்கள். இப்பொருள்களைத் தெரிந்து பொண்டு, எம்பெருமான் பக்கலில் அன்பு பூண்டிருக்குமவர்கள், கேசவன் தமர் என்னலாம். விஷய மொன்றையும் அறியாமற்போனாலும் கேசவனென்கிற திருநாமம் பெற்ற பகவானே நமக்குத் தலைவன் என்று கொண்டிருக்குமவர்களும், கேசவன் தமர் என்னத்தகுவர். எமர் கீழ்மேலேழெழுபிறப்பும் கேசவன் தமரானார். ஏழெழ பிறப்பும் என்றது-ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரங்களில் “குலம் தாரயதே தாத ஸப்த சஸப்த ச” என்று சொல்லியிருப்பதை அடியொற்றியதாம். “எழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள்” என்றார் பெரியாழ்வாரும்

English Translation

Through chanting "Kesava, My Lord and master, Lord of celestials, My lotus-eyed Krishna, My black-gem Lord, Narayana!"my kin through seven generators before and after me, have become devotees; Lo, what a wonder, what fulfillment!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்