விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எந்தாய்! தண் திருவேங்கடத்துள் நின்றாய்*  இலங்கை செற்றாய்,*  மராமரம்
  பைந்தாள் ஏழ் உருவ*  ஒரு வாளி கோத்த வில்லா,*
  கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே*  உன்னை என்னுள்ளே குழைத்த எம் 
  மைந்தா,*  வான் ஏறே*  இனி எங்குப் போகின்றதே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எந்தாய் - ஸ்வாமியே!
தண் திருவேங்கடத்துள் நின்றாய் - குளிர்ந்த திருவேங்கட மலையிலே நிற்பவனே!
இலங்கை செற்றாய் - லங்காபுரியை அழித்தவனே!
மராமரம் - மராமரங்களினுடைய
பை தாள் ஏழ் - பருத்த அடிகள் எழும்

விளக்க உரை

முதலிலே உன்னை யறியாதிருந்தலெனக்கு, உன்னையும் உன்னுடைய போக்கியதையையுமறிவித்து, உன்னைவிட்டகன்று உயிராற்றமாட்டாதபடியான நிலைமையையும் விளைவித்த நீ, இனி என்னைவிட்டுப் பிரிந்துபோவது தகுதியோ வென்கிறார். என்னை அடிமை கொண்டருளுகைக்காகப் பரமபோக்யமான திருவேங்கடமலையிலே நின்றருளினவனே! அஹங்காரமே வடிவெடுதத்த இராவணனைத் தொலைத்தாப்போலே என்னுடைய அஹங்கார மமகாரங்களையும் போக்கியருளினவனே!, வாலிவதத்திற்குப் பூர்வாங்கமாக மராமரமேழையும் எய்து, ஸூக்ரிவனை விச்வஸிப்பித்தாப்போல, எனக்கும் அரியனசெய்து விச்வாஸத்தை யுண்டாக்கினவனே; தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுட்ர்முடிமேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மானே! என்னமுதமே!, என்னேடே கலக்கிற போது ஒரு நீராகக் கலந்துவிட்டு, இனி அகல்வது எங்ஙனேயோ? உனக்குப் போக்கிடந்தானுண்டோ?

English Translation

My Lord standing on the cool Venkatam hill, Destroyer of Lanka! My Lord who shot a mighty shaft uprooting seven trees! My Lord of celestials, Ambrosia, Lord wearing cool Tulasi flowers! My Prince, you have mingled into me, now whether can you go?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்