விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து*  அடியை அடைந்து உள்ளம் தேறி* 
  ஈறு இல் இன்பத்து இரு வெள்ளம்*  யான் மூழ்கினன்,*
  பாறிப் பாறி அசுரர் தம்*  பல் குழாங்கள் நீறு எழ,*  பாய் பறவை ஒன்று 
  ஏறி வீற்றிருந்தாய்*  உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பல பிறப்பும் -  பல பிறவிகளிலும
மாறி மாறி பிறந்து - பலகாலும் பிறந்து (இப்படி பிறப்பது இறப்பதாய் செல்லுகிற ஜன்ம பரம்பரைகளிலே வாரா நிற்க)
அடியை அடைந்து - இன்று உன் திருவடிகளைக்கட்டி
உள்ளம் தேறி - மனம் தெளிந்து
ஈறு இல் - முடிவில்லாத

விளக்க உரை

- பிரானே! உன்னுடைய நிரிஹேதுகமான அநுக்ரஹத்தாலே பெற்ற இந்த நன்மை, இனியொருநாளும் இடையறாதொழிய வேணும் இதுலே யெனக்கு வேண்டுவது, என்று எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றார். கடலிலே கிடந்ததொரு துரும்பானது, அலைமேலலையாகத் தள்ளப்பட்டு கரைசேருமாபோலே, அடியேனும் யாதொரு ஸூக்ருதலேகமுமின்றிக்கே பிறப்பது மிறப்பதுமாய் மாறிமாறிப் பிறந்து வந்து கொண்டிருக்கச்செய்தே, நிர்ஹேதுகமாக உன் திருவடிகளிலே கிட்டிக் கொண்டு நிற்கக் கண்டேனித்தனை. இங்ஙனே திருவடிகளிற் கிட்டினவாறே ‘இனி நாம் வாழ்ந்தோமாவோம்’ என்று ஒருவாறு நெஞ்சு தேறுதலடைந்தேன்; அந்தத் தேறுதலுண்டானவாறே, பெரிய ஆனந்தக் கடலிலே ஆழ மூழ்கினவனானேன்; என்னோடே இப்படி வந்து கலந்த நீ, ஒரு நாளும் இனிப் பிரியாதிருக்க பேணும் பலவகைப்பட்ட அசுரக் குழாங்கள் நீறாகும்படியாகப்பாய்கின்ற, பெரிய திருவடியை நியதமர்க அடிமை கொண்டிருக்குமாபோலே, அடியேனையும் ஆத்மாவுள்ள தனையும் ஆட்கொண்டருள வேணுமென்று அபேக்ஷத்தாராயிற்று.

English Translation

O Lord who rides the Garuda bird raising clouds of dust, chasing out the Asura clans! Through countless cycles of birth and death I have found your feet, My heart is consoled and bathed in a flood of endless joy. Pray do not part from me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்