விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உன்னைச் சிந்தை செய்து செய்து,*  உன் நெடு மா மொழி இசைபாடி ஆடி*  என் 
    முன்னைத் தீவினைகள்*  முழு வேர் அரிந்தனன் யான்,*
    உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த*  இரணியன் அகல் மார்வம் கீண்ட*  என் 
    முன்னைக் கோளரியே*  முடியாதது என் எனக்கே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உன்னை - உன்னை
சிந்தையினால் - நெஞ்சாலே
இகழ்ந்த - அநாதாரித்த
இரணியன் - ஹிரண்யகசிபுவினுடைய
அகல் மார்வம் கீண்ட - அகன்ற மார்வைக் கிழித்தவனும்

விளக்க உரை

ஆழ்வாரே! உமக்கு நான் இனிச் செய்யவேண்டுவதென்ன?’ என்று எம்பெருமான் கேட்க, ‘நான் பெறாததுண்டோ? எல்லாம் பெற்றேனே; இனிச் செய்யவேண்டுவதொன்றுமில்லை காண்’ என்கிறார். ஆச்ரிதன் ப்ரதிஜ்ஞை பண்ணின ஸமயத்திலே வந்து தோன்றுமியல்வினனாக நீ யிருக்கும்போது, எனக்கு என்ன குறையென்கிறார். ஆபத்துக்கு உதவுமவனாய் ப்ராப்த சேஷியாய்ப் பரம போக்யனாயிருக்கின்ற வுன்னை, அநவரதமும் ஹ்ருதயத்திலே பாவநை பண்ணி, உன்னுடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளுக்கு வாசகமான இத்திருவாய்மொழியை இசையோடே பாடி, அப்பாட்டுக்கு ஈடான அபிநயம் தோற்றும்வடி ஆடி, இப்படி மனமொழி மெய்கள் மூன்றினாலும் உண்டான போகத்தாலே என்னுடைய அநாதி பாபங்களை, ஒன்றொழியாமல் வேரோடே அறுத்தொழித்தேன், என்பது முன்னடிகளின் கருத்து.

English Translation

O My springing man-lion fore apart the hefty chest of the evil-thinking Hiranya! Thinking of you constantly, I have sung and danced my great exalted songs in praise of you. Now my age-old karmas are destroyed by the root. What can I not do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்