விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வள்ளலே மதுசூதனா*  என் மரகத மலையே,*  உனை நினைந்து, 
  எள்கல் தந்த எந்தாய்*  உன்னை எங்ஙனம் விடுகேன்,?* 
  வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிப்பாடி*  களித்து உகந்து உகந்து* 
  உள்ள நோய்கள் எல்லாம் துரந்து*  உய்ந்து போந்திருந்தே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வள்ளலே - உதாரனே!
மது சூதனா - மதுஸூதநனே!
என் மரதக மலையே - என்னுடைய அநுபவத்திற்குரிய மரதகமலை போன்றவனே!
உனை நினைந்து - உன்னை யநுஸந்தித்து
எள் கல் - ஈடுபட்டிருக்கும்படியான தன்மையை

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் நாம் நாம் என்று ஒரு தடவைக்கு இரு தடவையாகச் சொன்னது ஆழ்வார் தம்முடைய நைச்சியத்தை யெடுத்துக் காட்டினபடியாதலால், நைரிச்சியாநுஸந்தானம் பண்ணப் புகுந்தவிவர், நம்மை யொருகால் விட்டுவிடுவாரோ? என்று எம்பெருமான் அதிசங்சை கொள்ள, உன் வடிவழகை நிர்ஹேதுகமாக நீயே யென்னை அநுபவிப்பிக்க அநுபவித்து அதனாலே சிதிலனாயிருக்கின்ற நான், உன்னை விடப்ரஸக்தியுண்டோ வென்கிறார். உலகத்தில் தானஞ் செய்கிறவர்களெல்லாரும் வள்ளல் என்று சொல்லப்படார்கள்; ஒருவித வுபகாரமும் செய்யாதவர்களிடத்துக் கைம்மாறு கருதாமல் எபகாரம் செய்பவர்களே வள்ளல் எனப்படுவார்கள். இங்கு அப்படியே எம்பெருமான் நிர்ஹேதுகமாகத் தம்மை விஷயீகாரித்தமை தோன்ற வள்ளல்! என்கிறார். எம்பெருமான் தன்னை ஸர்வஸ்வதானமாகக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்ள வொண்ணாதபடி தடையாக நிற்கக்கூடிய பிரதி பந்தகங்களையும் தானே போக்கித்தந்தானென்ற கருத்துப்பட மதுசூதனா என்கிறார். “நீ உன்னைத் தருமிடத்தில் நான் ஸ்வீகாரியாதபடி பண்ணும் விரோதிகளை மதுவாகிற அஸூரனை நிரஸித்தாப்போலே நிரஸித்தவனே” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. எம்பெருமான தமக்கு உபகாரித்தருளினது அவன்றன்னுடைய அற்புதமர்ன வடிவழகு என்பது தோன்ற என் மரதகமலையே! என்கிறார். பச்கை மாமலைபோன்ற திருமேனியை எனக்கு அநுபவிக்கத் தந்தருளினவனே; என்றபடி.

English Translation

O My generous Lord and Father. O My emerald mountain! You gave me yourself to think on, and sing and dance in joy. Your effulgent glory has cured me of my sickness. Now that I am saved, how can I ever let you go!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்