விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாமரைக் கண்ணனை*  விண்ணோர் பரவும் தலைமகனை,*  துழாய் விரைப் 
    பூ மருவு கண்ணி*  எம் பிரானை பொன்மலையை,* 
    நாம் மருவி நன்கு ஏத்தி*  உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட,*  நாவு அலர் 
    பா மருவி நிற்கத் தந்த*  பான்மையே வள்ளலே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விண்ணோர்பரவும் - நித்யஸுரிகள் புகழ்கின்ற
தலைமகனை - ஸ்வாமியும்
விரை பூ மருவு - பாரிமளமுள்ள புஷ்யங்கள் பொருந்திய
துழாய் கண்ணி - திருத்துழாய் மாலையை யணிந்த
எம்பிரானை - எம்பெருமானும்

விளக்க உரை

நித்ய ஸூரிகளுக்குப்போலே எனக்குத் தன்னுடைய ஸௌந்தாரியம் முதலானவற்றை வருணிப்பதற்குப் பாங்கான வாக்கை அளித்தருளினானெம்பெருமான்; அவனுடைய வள்ளல்தனம் இருக்கும்படி என்னே! என்று விஸ்மயப்படுகிறார். “தாமரைக்கண்ணணை விண்ணோர்பரவுந்தலைமகனை” என்ற சொற்சேர்த்தியினால் கிடைக்கும் ரஸப்பொருளை நமபிள்ளை காட்டுகிறார்-“ஒருகால் திருக்கண்களாலே குளிரநோக்கினால் அதிலே தோற்று ஜ்வரஸந்நிபதிதரைப்போலே அடைவுகெட ஏத்தா நிற்பர்களாயிற்று நித்யஸூரிகளைத் தன்னுடைய கண்ணழகிலே தோற்பித்து அதைப்பற்றியே அவர்கள் வாய்வெருவிக் கொண்டிருக்குமாறு செய்வதுபோலே அடியேன் திறத்திலும் செய்தருளினென்பது குறிப்பு. (துழாய் விரை யித்யாதி)- பூவும் பாரிமளமும் மாறாதேயிருக்கும் திருத்துழாய் மாலையாலே அலங்காரிக்கப்பட்ட தன்னுடைய வடிவழகை எனக்கு நிர்ஹேதுகமாகக் காட்டித்தந்தவனென்றவாறு. (பொன்மலையை) அழ்வாரை விட்டுப் பெயர்ந்துபோகமாட்டாமல் ஸ்தாவரப்ரதிஷ்டையாக எம்பெருமானிருக்கிற விருப்புக்குப் பொன்மலை உவமையென்க.

English Translation

My Lord of lotus eyes, who wears a garland of sweet fragrant Tulasi flowers, is a mountain of gold, praised even by the celestials, He lets us approach him with praise and worship him through song. He lets us think of him and dance in joy. How generous of him!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்