விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கூறுதல் ஒன்று ஆராக்*  குடக் கூத்த அம்மானைக்,* 
  கூறுதலே மேவிக்*  குருகூர்ச் சடகோபன்,*
  கூறின அந்தாதி*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்* 
  கூறுதல் வல்லார் உளரேல்*  கூடுவர் வைகுந்தமே.     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒன்று கூறுதல் ஆரா -ஒரு குணத்தைச் சொல்லுதலும் முடியாத
குடக் கூத்த அம்மானை - குடக் கூத்தாடின கண்ணபிரானைப்பற்றி
கூறுதல் மேவி - சொல்லுவதில் ஆசை கொண்டு
குருகூர்சடகோபன் கூறின - அந்தாதி அந்தாதித் தொடையான
ஓர்ஆயிரத்துள் - ஆயிரம் பாசுரத்தினுள்ளே

விளக்க உரை

(கூறுதல்) இத்திருவாய்மொழியைக் கற்பார் இதிற்சொன்னபடியே எம்பெருமானைப் பாரிபூர்ணமாகத் திருநாட்டிலே நித்யாநுபவம் பண்ணப்பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. ஒரு குணத்தைப் பேசப்புகுந்தாலும் பேசித்தலைக்கட்டமுடியாமல் மீள வேண்டும்படியானவனாய், குடக்கூத்து முதலான திவ்ய சேஷ்டிதங்களினால் பரம ஸௌலப்யத்தைக்காட்டி ஆட்படுத்திக்கொள்ள வல்லவனான எம்பெருமானைப் பேசப்புகுந்து ஆழ்வார் அருளிச்செய்த அந்தாதித் தொடையான இவ்வாயிரத்துள் இத்திருவாய்மொழியை ஒதவேணுமென்னும் விருப்பமுடையாருண்டாகில் அவர் வைகுந்தமே கூடுவர் என்றதாயிற்று. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;- “அடியார்கள் குழாங்களை யுடன்கூடுவதென்று கொலோன்று ஆசைப்பட்டுப் பெறாதே ஆடியாடியாய் வ்யஸநப்படாதே இப்பாசுரமாத்திரத்தைச் சொல்லவே நான் பிரார்த்தித்துப் பெற்றபேறுபெறுவர்கள்; பித்ருதநம் கிடந்தால் புத்ரன் அழித்து ஜீவிக்குமத்தனையிறே. ஆழ்வார்பட்ட வ்யஸநம்படவேண்டா. இது கற்றார்க்கு இவர் பேற்றிலே அந்வயம்.” என்பதாம். வல்லாருளரேல் என்கையாலே இவ்விருள் தருமாஞாலத்திலே இதில் ருசியுடையார்துர்லபா; என்பது பெறப்படும்.

English Translation

This decad of the perfect thousand Andadi-songs by kurugur Satakopan, sung for the Lord Gopala, -the Lord indescribable as one, the Lord who danced with pots, -secures Vaikunta for those who master it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்