விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆண் அல்லன் பெண் அல்லன்*  அல்லா அலியும் அல்லன்,* 
    காணலும் ஆகான்*  உளன் அல்லன் இல்லை அல்லன்,*
    பேணுங்கால் பேணும்*  உரு ஆகும் அல்லனும் ஆம்,* 
    கோணை பெரிது உடைத்து*  எம் பெம்மானைக் கூறுதலே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம்பெம்மானை கூறுதல் - எம்பெருமானைப் பற்றிச் சொல்லுவதானது
கோணை பெரிது உடைத்து - மிகவும் ப்ரயாஸமுடையதாயிருக்கிறது; (ஏனென்னில், அப்பெருமான்)
ஆண் அல்லன் - ஆணுமல்லன்,
பெண் அல்லன் - பெண்ணுமல்லன்
அல்லா அலியும் - இவ்விரண்டுமல்லாத நபும்

விளக்க உரை

(ஆணல்லன்) எம்பெருமானைப் பேசித்தலைக்கட்டுவது மிகவும் ஆயாஸஸாத்யமென்கிறார். ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்-ஸகவஸ்து விலக்ஷணன் என்றபடி. ருக்வேத ஆரண்யகத்தில் ஓதப்பட்டுள்ளதையடியொற்றி இந்தப் பாசுரம். இப்பாசுரத்தை பட்டர் இங்ஙனம் உபந்யஸித்துக்கொண்டிருக்கையில் கேட்டிருந்த ஒரு தமிழன், உலகத்திலுள்ள பொருள்கள் ஸ்த்ரிலிங்கபும்லிங்க நபும்ஸகலிங்களிற் சேர்ந்தல்லது இருக்கமாட்டவே; எம்பெருமான் இந்த மூன்றுபடியிலும் சேர்ந்திலன் என்றால் சூத்யம் என்று சொன்னபடியாகுமே; பரப்ரஹமம் சூத்யம் என்றே ஆழ்வாரருளிச் செய்வது? என்று கேட்டானாம். அதற்கு உத்தரமாக பட்டர் அருளிச் செய்தது;- “ஸாமாந்யே நபும்ஸகம” என்றபடி “ஆணல்ல பெண்ணல்ல அல்லா வலியுமல்ல” என்று ஆழ்வார்அருளிச் செய்திருப்பா;. அங்ஙனன்றியே அல்லன் அல்லன் அல்லன் என்றே (ஆண்பாலுக்குரிய அன்விகுதியையிட்டு) அருளிச் செய்திருக்கையாலே ‘எம்பெருமான் ஸாமாந்ய புருஷனல்லன், புரஷோத்தமன்’ என்று தெரிவிக்கப் பட்டதாகாதோ? என்று. இதைப் கேட்டு அவன் மிகவுமுகந்தான்.

English Translation

My Lord is neither male nor female nor eunuch My Lord cannot be seen; he is not, nor non-existent. He takes the form by which you wish to see him, but he is not it. Describing my Lord is a veritable riddle indeed.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்